குடலில் இருக்கும் நச்சுகளை போக்கி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமா? இந்த ஜூஸ் குடிங்கள்…

First Published Sep 13, 2017, 12:50 PM IST
Highlights
Want to keep the toxins in the intestine clean? This juice resides ...


சராசரியாக ஒரு மனிதன் 70 வயது வரை வாழ்ந்தால். அவன் 100 டன் அளவு உணவும், 40 ஆயிரம் லிட்டர் தண்ணீரும் உட்கொள்கிறான். இதனால் நமது வாழ்நாளில் நமது குடலில் ஏறத்தாழ குறைந்தது 15 கிலோ வரை நச்சுக்கள் தங்குகின்றன. இவற்றை மொத்தமாக நாம் வெளியேற்றுவதே கிடையாது.

இவ்வாறு முழுமையாக வெளியேற்றப்படாத நச்சுக்களால் உடலில் முதலில் சேதமடைவது இரத்தம் தான்.

உடலில் இரத்தத்தில் நச்சுக் கலந்துவிட்டால் அது ஏனைய உடல் பாகங்கள் முழுவதும் சேதத்தை உண்டாக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. இதனால் தான் நமது குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

குடலை சுத்தம் செய்யும் ஜூஸ்

ஒரு நாளுக்கு மூன்று ஸ்பூன் அளவு அரைத்த ஆளிவிதைகள் உட்கொண்டு வந்தால் உங்கள் குடலை முற்றிலுமாக சுத்தம் செய்துவிட முடியும்.

மேலும் சிறுகுடலில் தேங்கும் சளி, மல தகடு, ஒட்டுண்ணிகள் போன்றவற்றை அகற்றவும் இது உதவுகிறது.

மேலும் இது உடல் எடையை சீரான முறையில் குறைக்கவும், கொழுப்பை கரைக்கவும் கூட வெகுவாக உதவுகிறது.

ஆளிவிதைகள் நச்சுக்களை உடலில் இருந்து போக்குவது மட்டுமின்றி, இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்க பயனளிக்கிறது.

இது சுவாசக் குழாய், வாயுக் குழாய், சிறுநீர் குழாய் போன்றவற்றை சுத்தம் செய்து உடல்நலத்தை ஊக்குவிக்கிறது.

முதல் வாரம் காலை உணவில் நொதித்த 100 மில்லி மோரில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு அரைத்த ஆளிவிதைகள் கலந்து குடித்து வாருங்கள்.

இரண்டாம் வாரம் காலை உணவில் நொதித்த 100 மில்லி மோரில் இரண்டு டேபிள்ஸ்பூன் அளவு அரைத்த ஆளிவிதைகள் கலந்து குடித்து வாருங்கள்.

மூன்றாம் வாரம் காலை உணவில் நொதித்த 150 மில்லி மோரில் மூன்று டேபிள்ஸ்பூன் அளவு அரைத்த ஆளிவிதைகள் கலந்து குடித்து வாருங்கள்.

அரைத்த ஆளிவிதைகள் கிடைக்கவில்லை எனில், முழு ஆளிவிதைகளை வாங்கி நீங்களே கூட அரைத்துக் கொள்ளலாம். மூன்று வாரம் தொடர்து காலை வேளையில் இதை உண்டு வந்தால் உடலில் நல்ல மாற்றத்தை காண முடியும். மறக்காமல் தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் குடித்து வாரங்கள்.

இந்த முறையை நீங்கள் வருடத்திற்கு ஒரு முறை பின்பற்றி வந்தால் குடல் சார்ந்த எந்த பிரச்சனையும் உங்களுக்கு வராது

click me!