உங்களுக்குத் தெரியுமா? கேரட் ஜீஸ் குடித்தால் முகம் பொன்னிறமாக மாறும்...

 
Published : Sep 12, 2017, 01:32 PM ISTUpdated : Sep 19, 2018, 01:10 AM IST
உங்களுக்குத் தெரியுமா? கேரட் ஜீஸ் குடித்தால் முகம் பொன்னிறமாக மாறும்...

சுருக்கம்

Do you know Carrot juice drinks the face will turn golden ..

இளமையான முகத்திற்கு இந்த டிப்ஸ்களை உபயோகித்து பாருங்கள். உடனடியாக உங்களுக்கு பலன்கள் கிடைக்கும்.

1.. வெந்தயக்கீரை பாசிப்பருப்பு சீரகம்

செய்முறை:

வெந்தயக்கீரை, பாசிப்பருப்பு, சீரகம் ஆகிய மூன்றையும் சேர்த்து வேகவைத்து வாரத்தில் இரண்டு அல்லது மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சியடைவதோடு முகம் சுருக்கம் மறையும். முகம் பளபளப்பாக மாறும்.

2.. வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாளாவது ஆரஞ்சு மற்றும் கேரட் ஜீஸ் குடித்து வந்தால் முகம் பொன்னிறமாக மாறும்.

3.. ஒரு ஸ்பூன் தேனுடன் கேரட் சாறு கலந்து முகத்தில் த்டவி வந்தால் சுருக்கங்கள் வேகமாக மறைந்துவிடும்.

4.. ஒரு வாழைப் பழத்தை மசித்து அதனுடன் ரோஸ் வாட்டரை கலந்து முகத்தில் தடவுங்கள். காய்ந்ததும் கழுவினால் சுருக்கங்கள் மறைவதோடு, முகமும் மென்மையாகும்.

5.. நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் ஆகிய இரண்டையும் சமஅளவு எடுத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து பின் கடலை மாவினால் தேய்த்து கழுவினால் முகம் புத்துணர்ச்சியாக இருப்பதை காணலாம்.

6.. இதே செய்முறையை ஆலிவ் எண்ணெய் மற்றும் சுத்தமான தேங்காய் எண்ணெயிலும் செய்யலாம். இவ்வாறு செய்வதால் இளமையான முகம் கிடைக்கும்.

PREV
click me!

Recommended Stories

Tea : டீ குடிக்குறப்ப வடை, பஜ்ஜி சேர்த்து சாப்பிடுறவங்க 'கவனிக்க' வேண்டிய விஷயம்
Tomato Side Effects : சாப்பாட்டுல அதிகமா தக்காளி சேர்ப்பீங்களா? இந்த பிரச்சனைகள் ஜாக்கிரதை!