உங்களுக்காக சமைக்கும் போது கிடைக்கும் நன்மைகள்..!!

By Asianet TamilFirst Published Feb 7, 2023, 11:09 PM IST
Highlights

சொந்தமாக சமைத்து உண்பதன் மூலம் தனிநபர்களுக்கு சில நன்மைகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இவ்வாறு சமைத்து உண்பது மனதை எல்லா வகையிலும் மேம்படுத்த உதவும் என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
 

இன்றைய போட்டி நிறைந்த உலகில், பெரும்பாலான மக்களுக்கு ஒரு நாளில் இருபத்தி நான்கு மணி நேரமும் போதுமானதாக இல்லை என்பதே பொதுவான புகாராக உள்ளது. வேலை, வீட்டு விவகாரங்கள் மற்றும் பிற தனிப்பட்ட விஷயங்கள் உள்ளிட்ட எதையும் சரிவர கவனிக்க முடியவில்லை என்று வருத்தம் தெரிவிக்கின்றனர். அதனால், சொந்த உணவை சமைத்து உண்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதன்காரணமாக ஹோட்டல் உணவை நம்பி அல்லது மற்றவர்கள் சமைப்பதை சாப்பிட நேருகிறது. இதனால் பெரும்பாலான மக்கள் ஹோட்டல் உணவை மட்டுமே நம்பியுள்ளனர்.

நினைவாற்றல் அதிகரிக்கும்

நீங்களே சமைத்து உணவு உண்பதன் மூலம் சுவையுடன் தொடர்புடைய நினைவாற்றலை மேலும் செயல்படுத்தலாம். சமைக்கப் போகும் உணவின் சுவையைப் பற்றி மூளையில் சில யோசனைகள் இருக்கலாம். இது உணவை நன்றாக சாப்பிடவும், ஆரோக்கியமான முறையில் சமைப்பதற்கும் பெரிதும் உதவுகிறது.

திறமை மேம்படும்

மூளையின் சொல்லுக்கு ஏற்ப நமது உடல் சரியாக வேலை செய்யும் போது, அது நல்ல பலனைத் தருகிறது. சமையலில் பல்வேறு பணிகள் இணைந்து செயல்படுகிறது. இது ஒவ்வொருவருடைய திறமையையும் மேம்படுத்த உதவுகிறது. சுறுசுறுப்பு, பல்பணி திறன், நினைவாற்றல், கைகள்-கண்கள் மற்றும் மூளையின் கட்டளைகளில் வேலை செய்யும் வேகம் மற்றும் துல்லியம் ஆகியவற்றை மேம்படுத்த சமையல் உதவுகிறது. எப்போதும் உற்சாகமாக இருப்பதற்கு இது ஒரு நல்ல பயிற்சியாகவும் அமைகிறது.

பீட்சா, பர்கர் அடிக்கடி சாப்பிடுபவரா நீங்கள்..?? இனி கவனமாக இருங்கள்..!!

தியானம் போன்றது

இன்று பெரும்பாலான மக்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். சமைப்பது இந்த வகையான மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் குறைக்கவும் உதவுகிறது. அதனால் ஆண்கள், பெண்கள் என இருபாலருமே அவ்வப்போது சமையல் பயிற்சிகளை வீடுகளில் மேற்கொள்ளலாம். இது உங்களை அமைதிப்படுத்தும், ஃபோக்கஸ் கிடைக்கும். ஆனால் இது தீவிரம் நிறைந்த அழுத்தம் கொண்ட சமையலுக்கு பொருந்தாது. 

கவனம் கிடைக்கும்

நாம் எதைச் செய்தாலும், நம் கவனத்தை ஒருமுகப்படுத்த வேண்டும். இதற்கு சமைப்பதும் ஒரு நல்ல பயிற்சி. நீங்கள் கவனத்தை சிதறடித்தால் சமையலறையில் நிறைய தவறுகள் நடக்கலாம். எனவே அவர்கள் எவ்வளவு கவனக்குறைவாக இருந்தாலும், அவர்கள் தங்கள் மனதை குறைந்தபட்சமாக ஒருமுகப்படுத்த முயற்சி செய்கிறார்கள். கவனம் செலுத்த இது ஒரு நல்ல நடைமுறை.
 

click me!