'காளான்' பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. காளானில் புரதம் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன.
நம்மில் யாருக்கு தான் காளான் பிடிக்காது? குழம்பு, வறுவல், பொறியல் என பல்வேறு விதத்தில் காளான் சமைக்கப்பட்டு உண்ணப்படுகிறது. காய்கறிகளை போலவே காளான்களிலும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதிலிருக்கும் புரதம் மற்றும் அமினோ அமிலங்கள் பல உடல்நல நன்மைகளை வழங்குகின்றன. காளானில் வைட்டமின் டி, பி2 மற்றும் பி3 போன்ற மனிதனுக்கு வேண்டிய நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்குகிறது. அதனால் வாரத்தில் 2 முதல் 3 முறை காளான்களை சாப்பிட்டு வந்தால், உடலில் ஆற்றலையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
வைட்டமின் டி கிடைக்கும்
undefined
இன்றைய காலத்தில் பலரிடையே வைட்டமின் டி குறைபாடு கணிசமாக காணப்படுகிறது. இதற்கு பலரும் வெளியே சுற்றாமல் இருப்பதே முக்கிய காரணமாக உள்ளது. சூரிய ஒளியில் இருந்து மட்டுமின்றி வேறு சில உணவுகள் மூலமாகவும் வைட்டமின் டியை நாம் பெற முடியும். எனவே, காளான்கள் வைட்டமின் டியின் நல்ல ஆதாரமாகக் கருதப்படும் ஒரு உணவாகும். எனவே குழந்தைகளுக்கு வைட்டமின் டி கிடைக்க காளான்களை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
சோடியம்
சோடியம் குறைவாகவும் பொட்டாசியம் அதிகமாகவும் உள்ள காளான்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது உயர் இரத்த அழுத்தம் அல்லது குறைவான ரத்த அழுத்தப் பிரச்னைகளை குறைக்க உதவுகிறது. அதனால் குறிப்பிட்ட வயதை தாண்டிய பிறகு அசைவ உணவுகள் சாப்பிடுவதை குறைத்துக் கொண்டு, காளான்களை சாப்பிடலாம். இதனால் இருதய நலன் உள்ளிட்ட ஆரோக்கியம் காக்கப்படும்.
குறைந்த கலோரிகள்
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உணவில் சேர்த்துக்கொள்ளக்கூடிய உணவுப் பொருள் காளான். 100 கிராம் காளானில் மூன்று கிராம் புரதம் உள்ளது. காளான் சாப்பிடுவது உணவு உட்கொள்ளலை குறைக்க உதவும். அவை கலோரிகளிலும் குறைவு. இதனால் எடை இழப்பு செய்ய விரும்புவோர் அடிக்கடி காளான்களை தங்களுடைய உணவில் சேர்த்து வர வேண்டும்.
ஆண்டி ஆக்சிடண்டுகள்
காளானில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுவதால், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது. மேலும் இது குடல் ஆரோக்கியத்தும் நல்லது. காளானில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ உள்ளது. இதன்மூலம் கண் ஆரோக்கியம் மேம்படும், சரும பிரச்னைகள் நீங்கும்.
காதலர் தினக் கொண்டாட்டத்தில் ரோஜா பூக்கள் மீந்துவிட்டனவா..? கவலையை விடுங்க..!!
இருதய நலன்
இதில் எல்.டி.எல் என்கிற கெட்ட கொழுப்பை குறைக்கும் திறன் உள்ளது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை நீக்கி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த காளான் உதவுகிறது. கால்சியம் நிறைந்த காளான் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் நல்லது. எனவே இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டு வரலாம்.