உடலில் கால்ஷியம் குறைபாட்டால் திடீரென உடல் எடை அதிகரிக்கும் பிரச்னை ஏற்படும். ஆனால் சில வயதானவர்கள் பால் மட்டும் அருந்துவதற்கு சிரமப்படுவார்கள். ஆனால் எல்லா வயதினருக்கும் கால்ஷியம் மிகவும் அவசியமான சத்தாகும்.
எத்தனை முன்னெச்சரிக்கைகள் எடுத்தாலும், சில சமயங்களில் திடீரென உடல் எடை கூடிவிடும். குறிப்பாக 50 வயதுக்கு பின்னர் பலருக்கும் இந்த பிரச்னை ஏற்படுகிறது. குறிப்பிட்ட வயதில் உணவு கட்டுப்பாடு கொண்டிருந்தாலும் எடை கூடுகிறது. அந்த நேரத்தில் தசைகள் வலுவிழந்து காணப்படலாம். அதை தடுக்க பால் தினசரி அருந்தி வருவது நல்லது. ஆனால் குறிப்பிட்ட வயதில் பால் குடிப்பது எல்லோரையும் போல இல்லை. அதனால் பாலுக்கு பதிலாக கால்சியம் சத்து வழங்கும் உணவுகளைச் சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுகிறது. அதேபோல எடைக் கட்டுப்பாடு மற்றும் உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியமாகிறது.
கொட்டைகள்
சில கொட்டைகள் மற்றும் விதைகளை இடைவேளையில் சிற்றுண்டிகளாக சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் குடல் இயக்கங்களை மேம்படுத்துகிறது. வால்நட்ஸ், ஆளி விதைகள் மற்றும் சியா விதைகளில் ஒமேகா 3 கொழுப்புகள் உள்ளன. இவை இருதய நலனை மேம்படுத்துகிறது. மூளையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் அல்சைமர் நோயின் அபாயத்தை குறைக்கவும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உதவுவது குறிப்பிடத்தக்கது.
கடல் உணவுகள்
ஐம்பது வயதில் கடல் உணவுகள் மூலம் நிறைய சத்து கிடைக்கின்றன. டுனா, சால்மன் மற்றும் ட்ரவுட் போன்ற மீன்களில் வைட்டமின் பி 12 மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைய உள்ளன. அவை இதயம் தொடர்பான பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கவும், செல் மற்றும் திசுக்களின் மீளுருவாக்கத்தை அதிகரிக்கவும், ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது. இது சிறந்த இன்சுலின் மேலாண்மை மற்றும் எடை இழப்புக்கும் உதவுகிறது.
பீட்ரூட்டை இப்படி சாப்பிட்டீங்கன்னா கை மேல் பலன் கிடைக்கும்..!!
கீரைகள்
50 வயதிற்குப் பிறகு தினசரி உணவில் குறைந்த கொழுப்புள்ள பச்சைக் காய்கறிகளைச் சேர்த்துக்கொள்வது உடலுக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. கீரை மற்றும் ப்ரோக்கோலி போன்ற இலை காய்கறிகளில் நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. இதனால் செரிமான அமைப்பு சிறப்பாக செயல்படுகிறது. இருதய நோய் ஏற்படுவதற்கான அபாயமும் குறைகிறது.
பழங்களை சாப்பிடுங்கள்
50 வயதிற்குப் பிறகு ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு பழங்களை உணவுப் பழக்கத்தில் சேர்த்துக் கொள்வது நன்மையை தருகிறது. சிட்ரஸ் பழங்களில் அதிக ஆண்டி ஆக்சிடண்டுகள் இடம்பெற்றுள்ளன. இது எடையை குறைக்கும், இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்து மற்றும் உடலுக்கு வேண்டிய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வளர்சிதை மாற்ற விகிதத்தை துரிதப்படுத்தும் சத்தும் சிட்ரஸ் பழங்களில் உள்ளது. அதுமட்டுமின்றி, சிறந்த செல் மீளுருவாக்கம் செய்ய உதவுகிறது. சருமத்தில் வயதான அறிகுறிகளைக் குறைக்கிறது.