உடலை இரும்பு போல பலமாக வைத்திருக்கும் ஒரு பானம் பற்றித் தான் இந்தப் பதிவில் காணப் போகிறோம்.
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதேபோல் பலமாக வைத்திருப்பதும் முக்கியம். உடலை பலப்படுத்தும் பல உணவுகள் இயற்கையில் கிடைக்கிறது. அவ்வகையில் உடலை இரும்பு போல பலமாக வைத்திருக்கும் ஒரு பானம் பற்றித் தான் இந்தப் பதிவில் காணப் போகிறோம்.
வெல்லம் கலந்த நீர்
undefined
பழங்காலத்தில் இருந்தே இனிப்புச் சுவைக்கு பயன்படுத்தப்படும் முக்கியப் பொருளாக வெல்லம் உள்ளது. இதில் துத்தநாகம், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் தாமிரம் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகளவில் நிறைந்துள்ளது. இதனை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்தால் மிகவும் நல்லதாகும். ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த அற்புத பானம் ஒரு இயற்கையான நச்சுப் பொருளாக விளங்குகிறது.
பல்வேறு வியாதிகளுக்கும் இந்த இயற்கையான பானம் அருமருந்தாக திகழ்கிறது. உடலை பலமாக்குவதில் இந்த பானம் மிக முக்கிய பங்காற்றுகிறது. அவ்வகையில் இந்த அற்புத பானத்தை குடித்தால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று காண்போம்.
எப்படி தயார் செய்வது?
ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை சூடாக்கி, அதில் 1 அங்குல வெல்லத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் சிறிது நேரம் கிளறி விட வேண்டும். அப்போது வெல்லம் கொஞ்சம் கொஞ்சமாக உருகத் தொடங்கும். வெல்லம் முழுவதுமாக உருகிய பிறகு, பாத்திரத்தை இறக்கி விட்டு, சிறிது ஆறியதும் வடிகட்டி குடிக்க வேண்டும்.
வேறு வழியில், நீங்கள் வெல்லத்தை அரைத்து, வெதுவெதுப்பான தண்ணீரில் நேரடியாக கலந்தும் குடிக்கலாம்.
Chili: தினசரி உணவில் அதிகமான காரம் சேர்த்தால் உண்டாகும் பிரச்சனைகள் என்னவென்று தெரியுமா?
வெல்லம் கலந்த தண்ணீரின் நன்மைகள்