Alcohol: மது அருந்துவது நல்லதா? கெட்டதா? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்!

By Dinesh TG  |  First Published Dec 22, 2022, 10:55 AM IST

இன்றைய இளம் தலைமுறையினர் இடையே காணப்படும் பொதுவான கெட்டப் பழக்கம் என்றால், அது மது அருந்துவது தான். மது அருந்துவதால் உடலுக்கு பலவிதமான கெடுதல்கள் ஏற்படும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இது பற்றி நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதையும் பார்ப்போம்.
 


மதுபானம் தயாரிப்பு

மக்கள் தங்களின் நிலங்களில் விளைவிக்கப்படும் பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகள் போன்றவற்றைக் கொண்டு ஆரோக்கியம் நிறைந்த சில மதுபானங்களை தயாரித்து வந்தனர். இடத்திற்கு ஏற்ப மதுபானங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் தாடி கல்லு, மத்தியப் பிரதேசத்தில் மஹுவா, கோவாவில் ஃபெனி, அசாமில் அபோங், ஜார்கண்டில் ஹாண்டியா, ஹிமாச்சல பிரதேசத்தில் லக்டி, ஆந்திர பிரதேசத்தில் டோடி மற்றும் ராஜஸ்தானில் கேசர் கஸ்துரி என்ற பெயர்களில் மதுபானங்கள் மிகப் பிரபலமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

Latest Videos

undefined

தொடக்கத்தில் மதுபானங்களில், ஆரோக்கியம் நிறைந்த சில பொருட்கள் சேர்க்கப்பட்டாலும், தற்போது அதில் சில வேதிப் பொருட்கள் கலக்கப்படுகிறது. இவை உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது.

அதிகளவு மது ஆபத்து

அதிக அளவில் மது அருந்தினால் வயிற்றில் எரிச்சல் ஏற்பட்டு, இரைப்பை அழற்சி ஏற்படும். கல்லீரலில் வீக்கம், சிரோசிஸ் மற்றும் ஹெபட்டைட்டிஸ் போன்ற சில பாதிப்புகள் அதிகப்படியான மது அருந்துவதால் ஏற்படுகிறது. அதிகளவு மது அருந்துவதனால் மூளையின் நரம்பு பாதிப்பு, குழப்பம், மனநிலை மாற்றம், பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம், தெளிவற்ற சிந்தனை ஏற்படுவதோடு குரல்வளை, உணவுக்குழாய், மார்பகம், பெருங்குடல், கல்லீரல், மலக்குடல் போன்ற பகுதிகளில் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் அதிகமாக உள்ளது.

மிதமான அளவில் மது அருந்தினால், இதய நோய்கள் மற்றும் நீரிழிவு நோய்க்கு எதிராக பாதுகாப்பை அளிக்கிறது. ஆனால், அதுவே அதிகளவில் மது அருந்தினால் மரணம் போன்ற அச்சுறுத்தும் வகையிலான பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Chili: தினசரி உணவில் அதிகமான காரம் சேர்த்தால் உண்டாகும் பிரச்சனைகள் என்னவென்று தெரியுமா?

மது அருந்தும் அளவு

தினந்தோறும் ஒரு ஆண் குறைந்தது 1 முதல் 2 பானமும், பெண் 1 பானமும் அருந்துவது தான் நல்லது. மேலும், ஒரு வாரத்தில் 4 நாட்கள் மது அருந்தினால்  பாதிப்பை குறைவு தான். ஆனால், அதுவே வாரத்தின் 7 நாட்களும் தொடர்ச்சியாக மது அருந்தினால் அதிக பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

மது அருந்துவதற்கு முன்னரும் மற்றும் அதற்கு அடுத்த நாளும் புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். மது அருந்துவதற்கு முன்னர் ஒரு பெரிய கிளாஸ் அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது. மது அருந்தி விட்டு நன்றாக ஓய்வெடுக்க வேண்டியதும் அவசியமானதாகும். 

click me!