இந்த கடல் நத்தையின் விஷம் எல்லா வலிகளுக்கும் நிவாரணியாக இருக்காம்...

Asianet News Tamil  
Published : Mar 12, 2018, 01:27 PM ISTUpdated : Sep 19, 2018, 02:03 AM IST
இந்த கடல் நத்தையின் விஷம் எல்லா வலிகளுக்கும் நிவாரணியாக இருக்காம்...

சுருக்கம்

This sea snail poison is a relief for all the pain ...

** உடலில் ஏற்படும் பல்வேறு வலிகளுக்கும் நிவாரணம் தரக்கூடிய வகையில் மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

** எனினும் அமெரிக்காவில் Opioid எனப்படும் மாத்திரையும் வலி நிவாரணியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

** இந்த மாத்திரையினை அளவுக்கு அதிகமாக உள்ளெடுப்பதால் நாள்தோறும் 90 பேர் அமெரிக்காவில் மரணிப்பதாக ஆய்வு தகவல்கள் கூறுகின்றன. 

** இந்நிலையில் இப் பிரச்சினைக்கு சற்று ஆறுதல் தரும் விதமாக விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

** அதாவது கடலில் வாழும் Conus regius எனப்படும் சிறிய வகை நத்தையின் நச்சுப் பதார்த்தமானது வலி நிவாரணியாக செயற்படக்கூடியது என கண்டறியப்பட்டுள்ளது.

** இதனை Opioid மாத்திரைக்கு பதிலாக பயன்படுத்த முடியும் என குறித்த விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். 

** மேலும் இவ் வகை நத்தைகள் கரீபியன் கடற்பகுதிகளிலேயே அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

Climate Change: வெறும் ஆரம்பம்தான்! 2050-க்குள் இத்தனை கோடி மரணங்களா? உலகையே உலுக்கும் புள்ளிவிவரம்!
ஜாக்கிரதை.! ராத்திரியில இந்த 7 பழங்களை மறந்தும் சாப்பிடாதீங்க!