பலாவிதையில் அடங்கியுள்ள ஏராளமான மருத்துவ குணங்கள் இதோ...

 
Published : Mar 12, 2018, 01:25 PM ISTUpdated : Sep 19, 2018, 02:03 AM IST
பலாவிதையில் அடங்கியுள்ள ஏராளமான மருத்துவ குணங்கள் இதோ...

சுருக்கம்

Here are a number of medicinal properties contained in the ballot ...

பலாவிதையில் அடங்கியுள்ள ஏராளமான மருத்துவ குணங்கள் இதோ...

பழங்களை  விட  பழத்தின்  விதையில்தான் அதிக மரபணுக்கூறுகள் நிறைந்துள்ளது. அந்த வகையில் பலாவிதையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, விட்டமின் A, B, C, கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் போன்ற தனிமச்சத்துக்கள் அதிகமாக உள்ளது.

பலாவிதையின் மருத்துவ குனங்கள்...

** பலாவிதையில் உள்ள லிக்னான்கள், ஐசோபிளேவோன்கள், சப்போனின்கள் போன்றவை புற்றுநோய், செல் முதிர்ச்சி, செல் அழிவு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

** பலாவிதையில் உள்ள பிளேவனாய்டுகள் நமது உடம்பில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து அதிகப்படியான ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.

** பலாவிதையை நன்றாக வேகவைத்து அல்லது வறுத்து சாப்பிட்டு வந்தால், குடற்புண்கள் மற்றும் வயிறு தொடர்பான பிர்ச்சனைகள் வராமல் தடுக்கச் செய்கிறது.

** பலாவிதையில் குழம்பு வைத்து, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால், அது நமது உடலின் வலிமையை அதிகரிக்கச் செய்வதுடன், குளிர்ச்சியையும் உண்டாக்குகிறது.

** பலாவிதையை மட்டும் தனியாக அதிகம் சாப்பிடாமல், அதை உணவாக சமைத்து சாப்பிடுவதே நல்லது. ஏனெனில் அதை தனியாக சாப்பிட்டால் அது நமது உடலில் உஷ்ணத்தை அதிகரித்து, மார்பு, முதுகு மற்றும் வயிற்றில் கடும் வலியை ஏற்படுத்திவிடும்.
 

PREV
click me!

Recommended Stories

மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க
Skin Damaging Foods : முகப்பருக்களே இல்லாத சருமத்திற்கு இதுதான் ஒரே வழி! இந்த 7 உணவுகளை உடனே நிறுத்துங்க