கீரைகளை ஒதுக்கி வைக்காமல், விரும்பிச் சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும். இப்போதெல்லாம், விவசாயத்தில் பூச்சி மருந்துகள் பயன்படுத்தப்படுவதால், கீரைகளை சமைக்கும் போது, உப்பத் தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்த பிறகு சமைப்பது சிறப்பாக இருக்கும்.
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களை அடுத்து, கீரைகளுக்கும் முக்கிய பங்குண்டு. தினந்தோறும் உணவில் ஏதேனும் ஒரு வகை கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது, உடல் நலனைப் பாதுகாக்கும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். கீரைகளை ஒதுக்கி வைக்காமல், விரும்பிச் சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும். இப்போதெல்லாம், விவசாயத்தில் பூச்சி மருந்துகள் பயன்படுத்தப்படுவதால், கீரைகளை சமைக்கும் போது, உப்பத் தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்த பிறகு சமைப்பது சிறப்பாக இருக்கும்.
பசலைக் கீரை
கீரையில் பல வகைகள் இருந்தாலும், சில வகை கீரைகளில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. அதில் மிகவும் முக்கியமானது தான் பசலைக் கீரை. பசலைக் கீரையை அடிக்கடி சாப்பிடுவதால் நீரடைப்பு, மூத்திரக் கடுப்பு மற்றும் வெள்ளை ஒழுக்கு போன்றவை நீங்கும்.
பசலைக்கீரையில் உள்ள சத்துக்கள்
பசலைக்கீரையில் ஃபோலிக் அமிலம், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை அதிகமாக காணப்படுகிறது. சராசரியாக 100 கிராம் பசலைக் கீரையில் 79 கிராம் கலோரி, கார்போஹைட்ரேட் - 3.4 கிராம், புரதம் - 1.8 கிராம், நியாசின் - 0.5 மி.கி, கொழுப்பு - 0.3 கிராம், வைட்டமின் பி 6 - 0.24 மி.கி, ரிபோஃப்ளேவின் - 0.155 மி.கி, தயாமின் - 0.05 மி.கி, கால்சியம் - 109 மி.கி, பொட்டாசியம் - 510 மி.கி, இரும்பு - 1.2 மி.கி, மெக்னீசியம் - 65 மி.கி, மாங்கனீசு - 0.735 மிகி, பாஸ்பரஸ் - 52 மி.கி மற்றும் துத்தநாகம் - 0.43 மி.கி போன்றவற்றுடன் வைட்டமின் ஏ, ஈ மற்றும் ஃபோலிக் அமிலம் போன்றவையும் நிறைந்துள்ளது.
பசலைக் கீரையின் பயன்கள்
Rice Foods: அரிசி உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? கெட்டதா?
புதிய ரத்த உற்பத்தி
பொதுவாக உடல் சூட்டினால் கண் எரிச்சல், நீர்க் குத்தல், சிறுநீர் எரிச்சல் மற்றும் வெள்ளைப் படுதல் போன்ற பாதிப்புகள் அதிகமாக ஏற்படும். இந்தப் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க, பசலைக் கீரையை அடிக்கடி உணவாக சமைத்து சாப்பிட வேண்டும். இது நல்ல பலனைத் தரும்.