Avoid these foods: 40 வயதை நெருங்குபவர்கள் ஆரோக்கியமாக வாழ தவிர்க்க வேண்டிய உணவுகள்!

By Dinesh TG  |  First Published Dec 19, 2022, 4:48 PM IST

முன்பெல்லாம் 60 வயதை கடந்தவர்களுக்கு மட்டும் உண்டாகும் இதயநோய் மற்றும் நீரிழிவு நோய் போன்றவை இப்போதெல்லாம் 35 வயதைத் தாண்டியவுடன் பெரும்பாலும் பலருக்கு ஏற்படுகிறது.


வயதாகி விட்டால், ஆரோக்கியம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வரும். ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடல் நலனைப் பாதுகாக்கவும், முன்னதாகவே பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். முன்பெல்லாம் 60 வயதை கடந்தவர்களுக்கு மட்டும் உண்டாகும் இதயநோய் மற்றும் நீரிழிவு நோய் போன்றவை இப்போதெல்லாம் 35 வயதைத் தாண்டியவுடன் பெரும்பாலும் பலருக்கு ஏற்படுகிறது. இதற்கு மிகவும் முக்கியமான காரணம், நம்மிடையே இருக்கும் தவறான உணவுப் பழக்கம் தான். சரிவிகித உணவு முறையைப் பின்பற்றி வந்தால், நாம் பல நோய்களை வரும் முன்னரே தடுக்கலாம். உணவை சரிவிகித அளவில் சாப்பிடும் போது உடலுக்குத் தேவையான அனைத்து விதமான சத்துக்களும் எளிதில் கிடைத்து விடும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

Latest Videos

undefined

தற்போதைய காலகட்டத்தில் 40 வயதினை நெருங்கும் ஆண்கள் சில வகை உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டியது அவசியம் ஆகும். இந்த உணவுகளைத் தவிர்த்தால், 40 வயதைக் கடந்த பிறகும் ஆரோக்கியமாக இருக்க முடியும். கீழ்க்கண்ட உணவுகளை 40 வயதை நெருங்கும் நபர்கள் மட்டுமின்றி, அனைவருமே தவிர்ப்பது தான் உடல் நலத்திற்கு நல்லது.

செயற்கை புரதங்கள்

செயற்கை புரதங்களில் கொழுப்பு மற்றும் செயற்கையான இனிப்புகள், ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய்கள் மற்றும் சுவைகள் போன்றவற்றால் நிரம்பியுள்ளது. மேலும் இது கல்லீரலுக்கு நச்சுத் தன்மையையும், உங்களின் இதயத்திற்கு தீங்கையும் விளைவிக்க கூடியது.

சர்க்கரை சேர்த்த குளிர் பானங்கள்

சர்க்கரை சேர்த்த குளிர் பானங்கள் மிக மோசமானவை. 40 வயதைக் கடந்த பிறகும் இந்த பானங்கள் குடிப்பது உடல் நலத்திற்கு நல்லது கிடையாது. 

பாப்கார்ன்

பாப்கார்ன்களில் பல வகையான செயற்கை சுவையூட்டிகளை சேர்த்து தான், பாக்கெட் போட்டு விற்பனை செய்கின்றனர். மேலும், சினிமா தியேட்டர்களில் விற்பனை செய்யப்படும் பாப்கார்னில் ட்ரான்ஸ் கொழுப்புகள் நிறைந்துள்ளன. இவை இதய நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. 

Joint Pain: மூட்டு வலியைத் தடுக்க இந்த ஒரு உடற்பயிற்சியை செய்தால் போதும்!

சோயா சாஸ்

சோயா சாஸில் அதிகமான அளவில் அளவில் சோடியம் நிறைந்துள்ளது. ஒரு டீஸ்பூன் சோயா சாஸில் 879 மில்லிகிராம் சோடியம் நிறைந்திருக்கும். எனவே, சோயா சாஸ் நிறைந்துள்ள உணவுகளை அதிகமாக சாப்பிடுவதை தவிர்த்து விடுவது தான் மிகவும் நல்லது.

உப்பு நிறைந்த உணவுகள்

ஃப்ரைஸ் அல்லது சிப்ஸ் போன்ற உப்பு நிறைந்த உணவுகள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் சரும வயதிற்கு வழி வகுத்து விடுகிறது. ஆகையால், உப்பு நிறைந்த உணவுகளை தவிர்ப்பது தான் நலம்

click me!