செலவே இல்லாமல் நம் உடம்பிலுள்ள இரத்தத்தை இப்படிதான் சுத்திகரிக்கணும்... 

Asianet News Tamil  
Published : Jun 01, 2018, 01:49 PM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
செலவே இல்லாமல் நம் உடம்பிலுள்ள இரத்தத்தை இப்படிதான் சுத்திகரிக்கணும்... 

சுருக்கம்

This is the purification of the blood of our body without cost

 
இயற்கை முறையில் நம் உடம்பிலுள்ள இரத்தத்தை இப்படிதான் சுத்திகரிக்கணும்...

** செம்பருத்தி பூவின் இதழ்களை நறுக்கி, அதில் எலுமிச்சை சாறு விட்டு வெயிலில் வைத்து பிசைந்து சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை கலந்து காய்ச்சி வடிகட்டி நீரில் கலந்து குடித்து வரவேண்டும்.

** தினமும் நமது உணவில் பீட்ரூட்டை சமைத்து சாப்பிட்டு வந்தால், நமது உடல்பில் புத்தம் புதிய ரத்தம் உற்பத்தியாகும். மேலும் பீட்ரூட்டை நறுக்கிப் பச்சையாக எலுமிச்சைப்பழச் சாறு கலந்து சாப்பிட்டால், ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்.

** முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச்சத்து அதிகமாக இருக்கின்றது. எனவே இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்தசோகை இருப்பவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் உற்பத்தியாகும்.

** செம்பருத்தி பூவின் இதழ்களை நன்றாகச் சுத்தம் செய்து காய வைத்து பொடி செய்து அதை தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் 1 டம்ளர் வெந்நீரில் 1 ஸ்பூன் பொடியை கலந்து குடித்து வந்தால், நமது உடல் சோர்வை குறைத்து ரத்தத்தை தூய்மை அடைய செய்யும்.

** முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு முட்டை உடைத்து பருப்புடன் ஊற்றி, கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வந்தால், ரத்தம் விருத்தியாகும்.

** முருங்கை இலை சாறுடன் பால் கலந்து கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்குக் கொடுத்தால், ரத்தம் சுத்தம் அடைவதுடன், எலும்புகள் வலிமையடையும்.

** இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிடலாம் அல்லது தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட ரத்தம் சுத்தமாகும். ஆனால் வாத நோய் உள்ளவர்கள் இதை தவிர்க்க வேண்டும்.
 

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake