Cure Cancer: புற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் அற்புத உணவுப் பொருள் இதுதான்!

By Dinesh TGFirst Published Jan 17, 2023, 7:39 PM IST
Highlights

மஞ்சள் விதையில் உள்ள குர்க்குமின் எனும் இரசாயன நிறமி தான், அதன் மஞ்சள் நிறத்திற்கு காரணம். புற்றுநோய் கட்டிகள் வராமல் தடுப்பதில் குர்க்குமின் நிறமி மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

இயற்கையில் கிடைக்கும் அனைத்து மருத்துவப் பொருட்களும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் வல்லமை பெற்றவை. இந்த வரிசையில் மஞ்சளுக்கு மிக முக்கிய இடம் உண்டு. மஞ்சள் உணவுப் பொருளாகவும், அழகு சாதனப் பொருளாகவும் மட்டுமல்லாமல், உடலில் உள்ள இரத்தத்தையும் சுத்தம் செய்கிறது. ஆகையால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைவருமே மஞ்சளை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்ப இந்த மஞ்சள் வகைகளின் பெருமதியில் மாற்றம் ஏற்படும். எடுத்துக்காட்டாக, சேலம் மற்றும் ஈரோடு போன்ற இடங்களில் வளரும் மஞ்சள் பெருமதி வாய்ந்தாக கருதப்படுகிறது.

மஞ்சளின் மகத்துவம்

மருத்துவ குணங்கள் நிறைந்த மஞ்சளில் முட்டா மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் மற்றும் விரலி மஞ்சள் என 3 வகைகள் இருக்கிறது. அவ்வகையில் மஞ்சளின் முக்கியத்துவம் குறித்து தெரிந்துக் கொள்வது அவசியமாகிறது. மஞ்சள் விதையில் உள்ள குர்க்குமின் எனும் இரசாயன நிறமி தான், அதன் மஞ்சள் நிறத்திற்கு காரணம். புற்றுநோய் கட்டிகள் வராமல் தடுப்பதில் குர்க்குமின் நிறமி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகவே தினசரி உணவில் மஞ்சளை சேர்த்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி மஞ்சள் கலந்த பாலைக் குடிப்பதும் சிறந்த பலன்களைத் தரும்.

மஞ்சளின் நன்மைகள்

மஞ்சளில் இருக்கும் சில இரசாயனங்கள், இரத்தக் குழாய்களில் அடைப்புகள் ஏற்படுவதைத் தடுக்கிறது. இதனால் கொலஸ்ட்ரால் பிரச்சினை உள்ளவர்கள், மஞ்சளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும் போது, பசும்பாலில் மஞ்சள் கலந்து குடித்தால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இதன் காரணமாக, உடலில் வைரஸ் தொற்றுக்கள் மற்றும் பாக்டீரியாக்கள் பரவுவது தடுக்கப்படும்.

பொதுவாகவே செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய இரு கிழமைகளில், மஞ்சள் தூளைக் கலந்து தூளிகளை வீட்டில் தெளிப்பார்கள். இவ்வாறு செய்வதனால் வீட்டிலுள்ள கிருமிகள் அழிந்து விடும்.

Liver: கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும் உணவுகள் இவை தான்: இனிமே உஷாரா இருங்கள்!

மஞ்சள் தூள் கலந்த உணவுகளை எடுத்துக் கொள்வதனால், உடலில் உள்ள செல்கள் அழியாமல் பாதுகாக்கப்படுகிறது.

சொரி மற்றும் சிரங்கு போன்ற பிரச்சினைகளால், தோலில் நிறமாற்றம் ஏற்படின், மஞ்சளை அரைத்துப் பூசினால் போதும். மிக எளிதில் குணமடையும்.

மஞ்சள் ஆகச் சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. மஞ்சளின் ஆரோக்கிய நன்மைகள் உங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றால், தினசரி உணவில் மஞ்சளை சேர்த்துக் கொள்ளுங்கள். 

click me!