தினமும் இரண்டு கொய்யாப்பழம் சாப்பிட்டால் இந்த மாற்றம் உங்கள் உடலில் நிகழும்...

 
Published : May 22, 2018, 01:13 PM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
தினமும் இரண்டு கொய்யாப்பழம் சாப்பிட்டால் இந்த மாற்றம் உங்கள் உடலில் நிகழும்...

சுருக்கம்

This change will occur in your body if you eat two guava daily.

கோடைக்­கா­லங்­களில் அப­ரி­மி­த­மாக விளையும் கொய்யாப்பழத்தின் மருத்துவ குணங்கள்...

** மலச்­சிக்கல் தீரும்: 

நோயின் ஆரம்­பமே மலச்­சிக்­கல்தான். அனைத்து நோய்­களின் தாக்­கமும் மலச்­சிக்­கலில் இருந்­துதான் ஆரம்­பிக்கும். மலச்­சிக்­கலைப் போக்­கி­னாலே நோயில்லா நல்­வாழ்வு வாழலாம் என்­பது சித்­தர்­களின் கூற்று. நன்கு கனிந்த கொய்யாப் பழத்தை இரவு உண­வுக்­குப்பின் சாப்­பிட்டு வந்தால் மலச்­சிக்கல் நீங்கும். குடலின் செரி­மான சக்தி அதி­க­ரிக்கும்.

** வயிற்­றுப்புண் ஆறும்: 

தற்­போ­தைய உண­வு­களில் அதிகம் வேதிப் பொருட்கள் கலந்­தி­ருப்­பதால் அவை அஜீ­ர­ணத்தை உண்­டாக்கி வயிற்றுப் புண்ணை ஏற்­ப­டுத்­து­கி­றது. இதனைப் போக்க உண­வுக்­குப்பின் கொய்­யாப்­பழம் சாப்­பி­டு­வது மிக நல்­லது. மூல நோயின் பாதிப்பு உள்­ள­வர்கள் இப்­பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் மூல நோயி­லி­ருந்து விடு­ப­டலாம்.

** கல்­லீரல் பலப்­படும்: 

உடலின் சேமிப்புக் கிடங்­கான கல்­லீரல் பாதிக்­கப்­பட்டால், உடலின் பித்­தத்தின் தன்மை மாறு­படும். இதனால் உடல் பல பாதிப்­பு­க­ளுக்கு உள்­ளாக நேரிடும். இதை தவிர்த்து கல்­லீ­ரலை பலப்படுத்த கொய்­யாப்­ப­ழத்தை அடிக்­கடி சேர்த்துக் கொள்­வது நல்­லது.

** நீரி­ழிவு நோயா­ளி­க­ளுக்கு: 

நீரி­ழிவு நோயின் தாக்கம் கண்­டாலே அதை சாப்­பிடக் கூடாது இதை சாப்­பிடக் கூடாது என்ற கட்­டுப்­பா­டுகள் பாடாய்ப்­ப­டுத்தும். ஆனால் நீரி­ழிவு நோயா­ளி­க­ளுக்கு உண்­டாகும் பாதிப்­பு­களை குறைக்க கொய்­யாப்­பழம் உகந்­தது. மேலும் இரத்­தத்தில் சர்க்­க­ரையின் அளவை கட்­டுப்­ப­டுத்தும் தன்­மையும் உண்டு.

** இரத்­தச்­சோகை மாறும்: 

இரத்­தத்தில் இரும்­புச்­சத்து குறை­வதால் இரத்­தச்­சோகை உண்­டா­கி­றது. இந்­தியக் குழந்­தை­களில் அதுவும் பெண் குழந்­தை­களில் 63.8 சத­வீதம் குழந்­தைகள் இரத்­தச்­சோ­கையால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர் என உலக சுகா­தார அமைப்பு எச்­ச­ரித்­துள்­ளது. இக்­கு­றையை பழங்­களும் கீரை­களும் நிவர்த்தி செய்யும். இதில் குறிப்­பாக கொய்­யாப்­பழம் இரத்­தச்­சோ­கையை மாற்றும் தன்மை கொண்­டது.

** கொழுப்பைக் குறைக்கும்: 

அதிக இரத்த அழுத்தம், அதிக கொழுப்பை குறைக்கும் தன்மை கொய்­யா­வுக்கு உண்டு. தினமும் இரண்டு கொய்­யாப்­பழம் உண்டு வந்தால் கொலஸ்ட்ரோல் குறையும்.

PREV
click me!

Recommended Stories

Winter Hair Care : குளிர்காலத்துல ஒரு முடி கொட்டாம அடர்த்தியாக வளரனுமா? அப்ப இந்த எண்ணெய்ல ஒன்னு தேய்ங்க!
Weight Loss : சியா விதை நீரா? சீரக தண்ணீரா? உடல் எடையை விரைவில் குறைக்க எது பெஸ்ட்?