நம் உடலில் இந்த வைட்டமின்கள் குறைந்தால் இந்த அறிகுறிகள் தோன்றும்...

 
Published : May 23, 2017, 01:29 PM ISTUpdated : Sep 19, 2018, 12:39 AM IST
நம் உடலில் இந்த வைட்டமின்கள் குறைந்தால் இந்த அறிகுறிகள் தோன்றும்...

சுருக்கம்

These vitamins are less visible in our body.

நமது உடலில் தோன்றும் ‌சில அ‌றிகு‌றிகளை வை‌த்தே எ‌ந்த ‌வை‌ட்ட‌மி‌ன் ந‌மது உட‌லி‌ல் குறை‌கிறது எனபதைக் கண்டறிந்து அ‌ந்த வை‌ட்ட‌மினை‌ப் பெற எ‌ந்த ‌விதமான உணவு உட்கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

வைட்டமின் `ஏ’:

இது குறைந்தால் கண் பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். கருப்பையில் கரு வளர்வதற்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம்.

இந்த வைட்டமின் எதில் இருக்கு:

முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் `ஏ’ அதிகம் காணப்படுகிறது.

வைட்டமின் `பி’:

இது குறைந்தால் வயிறு மந்தமும், அஜீரணமும், ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதம், இதய பாதிப்பு ஏற்படவும் சாத்தியக் கூறுகள் அதிகம். அத்துடன், வாயில் புண் உண்டாகும்.

இந்த வைட்டமின் எதில் இருக்கு:

கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் ஆகியவற்றில் இந்த வைட்டமின் அதிகம் உள்ளது.

வைட்டமின் `சி’:

இது குறைந்தவர்கள் மன அமைதி இழப்பர். மேலும், தோற்றத்தில் சிடுமூஞ்சியாக காணப்படுவர். எலும்புகள் பலம் குறையக்கூடும். பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும்.

இந்த வைட்டமின் எதில் இருக்கு:

ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளை, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

வைட்டமின் `டி’:

வைட்டமின் `டி’ இல்லாவிட்டால் எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள் கெடக்கூடும். வைட்டமின் `டி’ போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில் போல் வளைந்துவிடும். வயிறு ஊதும்.

இந்த வைட்டமின் எதில் இருக்கு:

போதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் அதன் உடலே வைட்டமின் `டி’யை தயாரித்துக் கொள்ளும். முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றிலும் வைட்டமின் `டி’ அதிகம் உள்ளது. அ‌திகாலை 7 ம‌ணி வெ‌யி‌‌லி‌ல் நா‌ம் ‌நி‌ன்றா‌ல் சரும‌ம் வை‌ட்ட‌மி‌ன் டியை உருவா‌க்‌கி‌க் கொ‌ள்ளு‌ம்.

வைட்டமின் `ஈ’:

இது குறைந்தால் தசைகள் பலவீனமடையும். மலட்டுத்தன்மையும் உண்டாகும். நீண்ட நாளைய தோள்பட்டை வலி ஆகியவற்றிற்கும் வைட்டமின் ஈ உதவும்.

இந்த வைட்டமின் எதில் இருக்கு:

கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்டமின் `ஈ’ சமச்சீர் விகிதத்தில் கிடைக்கும்.

PREV
click me!

Recommended Stories

Fish Eggs Benefits : மீனை விட 'மீன் முட்டை' ரொம்ப நல்லதாம்!! ஆனா 'இவங்க' மட்டும் சாப்பிடவே கூடாது
Knee Pain Relief Tips : தாங்கவே முடியாத மூட்டுவலிக்கும் 'நிவாரணம்' அளிக்கும் எளிய வழிகள்; ஒருமுறை செஞ்சு பாருங்க