
உலகில் உள்ள உணவுப் பொருள்களில் மிக உயர்வானது தேங்காய்.
நம்ப முடியலையா? அதனால் தான் தேங்காய்க்கு அரணாக பாதுகாப்பு போல, கெட்டியான, வன்மையான ஓடு பெற்றுள்ளது. வேறு எந்த காய்க்கும் இப்படி இருந்து பார்த்ததுண்டா.
குடிக்க நீரும், உண்ண உணவும் ஒருங்கே பெற்ற உயரிய உணவுக் குடுக்கை தேங்காய்.
உடல் உறுப்புகளுக்கு மிக்க வலிமை அளிக்கும்.
உடல் உறுப்புகளை மிகவும் தூய்மையாக வைத்துக் கொள்ளவும் தேங்காய் உதவும்.
தேங்காய் நன்கு பசி தாங்கவல்லது.
தேங்காயை உணவாக உண்டு வருவதால் தோலும் உள்ளுறுப்புகளும் மென்மையும் ஒலியும் பெறுகின்றன.
தேங்காய் சாப்பிட்டால் மூட்டுகள் உராய்தலின்றி செயல்படும்.
தேங்காய் உண்பதால் ஐம்புலன்களுமே ஆற்றலில் சிறக்கின்றன.
உடலுக்கு நச்சு ஒழிப்பு ஆற்றல் தரும்.
இளநீர் முதலாக நன்கு முற்றிய நெற்றுத் தேங்காய் வரை எந்நிலையிலும் உண்ணத்தக்க ஒப்பற்ற உணவு தேங்காய் ஒன்றே!