
கொழுப்பைக் குறைக்கிறது
உடல் பருமன் நோயினால் அவதிப்படுபவர்கள் நம் நாட்டில் மிக அதிகம். நீரிழிவு மற்றும் இதய நோய்களையும் இந்த உடல் பருமன் ஏற்படுத்துகிறது. நெல்லிக்காயில் உள்ள அதிக அளவிலான புரதச்சத்துக்கள் நம் உடலிலுள்ள கொழுப்பைக் கரைத்து அகற்றுகிறது.
கண் பார்வையை அதிகரிக்கிறது
கண் புரை என்னும் பார்வை நோயைத் தவிர்ப்பதில் நெல்லிக்காய் பெரிதும் உதவுகிறது. மேலும், கண் சிவப்பாதல், கண்களில் நீர் வடிதல், கண் எரிச்சல், மாலைக் கண் உள்ளிட்ட பலவிதமான பிரச்சனைகளைப் போக்குவதற்கும் நெல்லிக்காய் உதவுகிறது. கண்கள் எப்போதும் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
இதய நோய்களை கட்டுப்படுத்துகிறது
நம் இதயத்திற்கும் பலவிதமான பலன்களை நெல்லிக்காய் அளிக்கிறது. கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, அதன் விளைவாக இதயத்தைப் பாதுகாக்கிறது. இருதயத்திற்குள் இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.
தலைமுடியை வலுவாக்குகிறது
நம் தலைமுடியை வலுவாக்குவதில் கால்சியத்தின் பங்கு அதிகம் உள்ளது. இந்தக் கால்சியம் நம் உடலுக்குள் எளிதாக ஊடுருவுவதற்கு நெல்லிக்காய் உதவுகிறது. நாம் உபயோகப்படுத்தும் ஷாம்புக்களில் நெல்லிக்காய் கலந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நச்சுப் பொருட்களைக் குறைக்கிறது
நெல்லிக்காயில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. இதனால் நாம் உண்ணும் உணவுகள் எளிதில் செரிமானமாகும். நச்சுப் பொருட்கள் விரைவில் வெளியேறும். சிறுநீரகங்களையும் இது சீராக இயங்க வைக்கிறது.