Body Temperature: குளிர் காலங்களில் உடல் வெப்ப நிலையை பராமரிக்கும் உணவுகள் இவை தான்!

Published : Nov 23, 2022, 08:44 PM IST
Body Temperature: குளிர் காலங்களில் உடல் வெப்ப நிலையை பராமரிக்கும் உணவுகள் இவை தான்!

சுருக்கம்

ஆரோக்கியம் நிறைந்த குளிர்கால உணவுகளை சாப்பிடுவது, நோயின்றி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

குளிர்காலம் வந்துவிட்டாலே, பலருக்கும் சளி, காய்ச்சல் என சில குளிர்கால நோய்த்தொற்றுகள் வந்து விடும். பொதுவாக குளிர்காலங்களில் நம் உடலின் வெப்ப நிலை குறையத் தொடங்கும். அப்போது, உடுத்தும் ஆடைகள் மட்டுமின்றி, உணவுகளும் உடலின் வெப்ப நிலையை பராமரிக்க உதவுகிறது. தடிமனான கம்பளி ஆடைகள் மட்டுமே குளிரை சமாளிக்கப் போதாது. ஆரோக்கியம் நிறைந்த குளிர்கால உணவுகளை சாப்பிடுவது, நோயின்றி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

குளிர்கால உணவுகள்

ஒவ்வொரு இனிப்பு வகை உணவிற்கும் ஒருவித கவர்ச்சியான சுவையை சேர்க்கிறது வெல்லம். சளி, இருமல் அல்லது நுரையீரல் தொற்றுக்கு மிகச் சிறந்த மருந்தாக வெல்லம் செயல்படுகிறது. குளிர் காலங்களில் உடலை சூடாக வைத்திருக்க வெல்லம் உதவி புரிகிறது.

குளிர்காலத்தை சமாளிப்பதற்கு சூப் உதவி செய்கிறது. குளிர்காலத்தில் நம் உடலை சூடாக வைத்திருக்கவும், செரிமான அமைப்பினை பராமரிக்கவும் சூப்கள் ஒரு மிகச் சிறந்த உணவாகும். 

பீன்ஸ், பீட்ரூட், கீரை, செலட், ப்ரோக்கோலி மற்றும் காளான் போன்றவை குளிர்காலத்தில் நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவி செய்கிறது.

முட்டைகளை சாப்பிடுவது புரதம் மற்றும் ஊட்டச்சத்து தேவைகளை நிவர்த்தி செய்வது மட்டுமின்றி, குளிர்காலத்தில் மிகவும் ஆரோக்கியமான உணவாகவும் அமைகிறது.

Digestive Problems: செரிமான பிரச்சனையை 30 நிமிடத்தில் சீராக்கும் அற்புத பானம்!

பீட்ரூட், கேரட், ப்ரோக்கோலி மற்றும் டர்னிப்ஸ் ஆகிய காய்கறிகளை சாலடுகள் செய்து சாப்பிடலாம். இவை அனைத்திலும் வைட்டமின் ஏ சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது ஒவ்வாமை மற்றும் நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது. மேலும், செரிமானத்தை நன்றாக ஊக்குவிக்கிறது.

பல ஊட்டச்சத்துக்களை தன்னகத்தே கொண்ட  சர்க்கரைவள்ளிக் கிழங்கு அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஓர் உணவாகும். இவை வைட்டமின் சி நிரம்பியுள்ள சப்ளிமெண்ட்ஸ் ஆகும். இவை பொதுவான காய்ச்சலுக்கு சிகிச்சைய அளிப்பதற்கும், கோவிட் 19-ஐ எதிர்த்துப் போராடுவதற்கும் மிகவும் முக்கியமானது.

குளிர்காலத்தில் உங்களை சூடாக மற்றும் ஆற்றலுடன் வைத்திருக்க உதவும் சிறந்த உணவுகளில் ஒன்று நட்ஸ். அதோடு சீசன் முழுவதிலும் ஆரோக்கியமாக இருக்க பாதாம், முந்திரி, பிஸ்தா, வேர்க்கடலை மற்றும் அக்ரூட் பருப்புகள் ஆகியவற்றை எடுத்து கொள்ளலாம்.

PREV
click me!

Recommended Stories

Foods for Hair Loss : இந்த '5' உணவுகள் முடி கொட்டுறத அதிகரிக்கும் இனிமேல் குறைச்சுக்கோங்க
Heart Healthy Exercises : ஆயுசுக்கும் இதயம் ஆரோக்கியமாக இருக்க '5' பயிற்சிகள் போதும்! தினமும் செய்ங்க