கல்லீரல் நோய் வயது வித்தியாசமின்றி அனைவரையும் தாக்குகின்றது. இதற்கு மிக முக்கிய காரணம் என்றால் அது நம்மிடையே இருக்கும் தவறான உணவுமுறை தான். அவ்வகையில், கல்லீரலைப் பாழாக்கும் உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
நம் உடலில் பல உறுப்புகள் இருந்தாலும், அதில் சில உறுப்புகள் மிகவும் முக்கியமானவை. இதில் முதன்மையானது கல்லீரல். தற்போதைய காலக்கட்டத்தில் கல்லீரல் நோய் வயது வித்தியாசமின்றி அனைவரையும் தாக்குகின்றது. இதற்கு மிக முக்கிய காரணம் என்றால் அது நம்மிடையே இருக்கும் தவறான உணவுமுறை தான். அவ்வகையில், கல்லீரலைப் பாழாக்கும் உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
கல்லீரலைப் பாதிக்கும் உணவுகள்
பாக்கெட் உணவுகள்
தொகுக்கப்பட்ட சிற்றுண்டிகளை சாப்பிடுவதால் கல்லீரலில் பாதிப்பு ஏற்படும். இந்த தொகுக்கப்பட்ட உணவுப் பொருட்களில் பொதுவாக உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பு ஆகியவை அதிகளவில் நிறைந்து காணப்படுகிறது. இவை அனைத்துமே கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாக உள்ளது. ஆகவே இந்த உணவுப் பொருட்களை தவிர்ப்பது தான் நலம். மேலும் விதைகள், மக்கானா மற்றும் குயினோவா போன்ற ஆரோக்கியம் நிறைந்த சிற்றுண்டிகளை எடுத்துக் கொள்வது, உங்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மையை அளிக்கும்.
வெண்ணெய்
பெரும்பாலும் பால் சம்பந்தப்பட்ட உணவுப் பொருட்கள் அனைத்தும், கல்லீரலில் பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக அமைகிறது. அவற்றில் வெண்ணையும் ஒன்று. ஏனெனில் இதில் அதிகளவில் நிறைவுற்ற கொழுப்புகள் உள்ளது. இவை நம் உடலுக்கு தீங்கை விளைவிப்பது மட்டுமின்றி, கல்லீரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
அதிக சர்க்கரை வேண்டாம்
அதிக அளவிலான சர்க்கரையை எடுத்துக் கொள்வது கல்லீரலில் கொழுப்பு தேங்க வழிவகை செய்கிறது. காரணம் என்னவெனில், சர்க்கரை கொழுப்பாக மாற்றப்பட்ட பிறகு, கல்லீரலில் தங்கி விடுகிறது. இதனால் கொழுப்பு கல்லீரல் நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது.
அதிக உப்புக்கு ஆகாது
அதி. அளவிலான உப்பு எடுத்துக் கொள்வதும் கல்லீரலுக்கு நல்லதல்ல. அதிக உப்பினால் (சோடியம்) கல்லீரலில் நார்த் திசுக்கட்டிகள் உருவாக வாய்ப்புகள் உள்ளது. இது கல்லீரல் பாதிப்பை உண்டாக்கி விடும். ஆகவே பதப்படுத்தப்பட்ட உணவுகள், டப்பாக்களில் அடைக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் உப்பு சேர்க்கப்பட்ட ஊறுகாய்கள் ஆகியவற்றை தவிர்த்து விடுங்கள்.
சிவப்பு இறைச்சி
உங்கள் கல்லீரலில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் சிவப்பு இறைச்சிகளை செரிமானம் செய்ய கல்லீரல் மிகவும் கஷ்டப்படும். அதோடு,அதிகக அளவிலான புரதம் கல்லீரலில் கொழுப்பு படித்து ஃபேட்டி லீவர் என்ற நோயை ஏற்படுத்தி விடும். சிவப்பு இறைச்சியை சாப்பிடுவதில் ஆர்வமுள்ள நபர்களுக்கு இது கெட்ட செய்தியாக இருந்தாலும் உண்மை இது தான்.
ஆகவே, நமது உணவுப் பழக்கவழக்கத்தில் மாற்றத்தௌ கொண்டு வந்து, ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். அதுவே நம் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.