இந்த 5 பொருட்கள் இருந்தால் போதும்- எப்படிப்பட்ட வயிற்றுப் பிரச்னையையும் சமாளித்து விடலாம்..!!

By Dinesh TG  |  First Published Oct 8, 2022, 6:33 PM IST

வயிற்றை நாம் முறையாக பராமரிக்காமல் விட்டால் மலச்சிக்கல், இரைப்பை பிரச்னை, பைல்ஸ், வயிற்றுப்போக்கு, எடை குறைப்பு, எடை அதிகரிப்பு, அமிலத்தன்மை அதிகரிப்பு, உஷ்ணம் கூடுவது, குடல் ஆரோக்கியம் கெடுவது போன்ற பாதிப்புகள் ஏற்படும். இப்பிரச்னைகள் சிறியதாகத் தோன்றினாலும், உரிய நேரத்தில் சிகிச்சை எடுக்காவிட்டால் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. ஆயுர்வேத முறையில் வயிற்றை முறையாக பராமரிக்க பல்வேறு உணவு முறைகள் பரிந்துரைக்கப்படுகிறது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
 


சோம்பு (பெருஞ்சீரகம்)

வாய் புத்துணர்ச்சியை வழங்குவதில் சோம்பு முன்னிலை வகிக்கிறது. அதேபோல வயிறு சார்ந்த பிரச்னைகளுக்கும் சோம்பு புத்துணர்ச்சியை வழங்குவதாக உள்ளது. கடுமையான வயிற்றுப் பிரச்னைகள் இருக்கும் பட்சத்தில், சோம்பு சாப்பிட்டால் போதும். உடனடியாக குணமாகிவிடும். ஒரு 100 கிராம் சோம்பில் 40 கிராம் நார்ச்சத்து உள்ளது. சோம்பிலுள்ள குணநலன்கள் செரிமானக் கோளாறை நிவர்த்தி செய்கிறது, மலச்சிக்கல் பிரச்னை ஏற்படாமல் தடுக்கிறது. கொழுப்பு கரைந்து வளர்சிதை மாற்றம் மேம்படுத்துகிறது. குறிப்பாக சோம்பில் டீ செய்து குடிப்பது பல்வேறு வகையில் உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது. ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து, சோம்பு விதைகளை சேர்த்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். அதில் எலுமிச்சை சாறு சேர்த்து காலையில் குடித்து வருவது நன்மை தரும்.

Tap to resize

Latest Videos

சீரகம்

இரவு முழுவதும் சீரகத்தை தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிறு சார்ந்த பிரச்னைகள் உடனடியாக தீரும். அதேபோன்று மலச்சிக்கல், குமட்டல் போன்ற நோய்களில் இருந்தும் விடுபடலாம். செரிமான பிரச்சனையால் அவதிப்பட்டால் கண்டிப்பாக இந்த சீரக நீர் உடனடி பலன் தரும். இதில் கார்போஹைட்ரேட், குளுக்கோஸ் மற்றும் கொழுப்பை உடைக்கும் என்சைம்கள் உள்ளன. இவை வயிற்றுப் பிரச்சனைகளை எளிதில் கட்டுப்படுத்தும்.

எந்த வயதில் இருந்து முகத்துக்கு ஃபேஷியல் செய்ய துவங்கலாம்..??

ஓமம்

உணவு செரிமானம் பிரச்னை கொண்டவர்கள், அரிச் சோற்றில் சிறிது உப்பு மற்றும் ஓமத்தை சேர்த்து சாப்பிடலாம். இதனால் வயிற்றில் அமில உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது. இதை சாப்பிடுவதால் வாய்வு பிடிப்பு, வாயு அதிகரிப்பு மற்றும் அல்சர் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஓமத்திலுள்ள தைமால், கார்வாக்ரோல் ஆகியவை பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளுக்கு எதிராக போராடுகின்றன. உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள், ஓமத்தை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பசி அதிகரிக்கும். வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கால் அவதி அடைபவர்களும் ஓமத்தை தண்ணீரில் கலந்து குடித்து வரலாம்.

கருத்தடை மாத்திரைகளை சாப்பிடும் பெண்களுக்கு உடல் எடை கூடுமா? ஆய்வு கூறும் உண்மை..!!

பெருங்காயம்

பெரும் காயங்களை (பிரச்னைகள்) உடனடியாக போக்கக்கூடிய ஆற்றல் படைத்தது என்பதால், அதற்கு பெருங்காயம் என்கிற பெயர் வழங்கப்பட்டது. வயிறு சம்மந்தப்பட்ட அஜீரணம், நெஞ்செரிச்சல், வாயு பிடிப்பு போன்ற பிரச்னைகளுக்கு உடனடி பலன் தருகிறது. இதை ஒரு கிளாஸ் மோரில் போட்டு குடித்தால், செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும். பசியின்மை, செரிமான நோய்கள் போன்ற பாதிப்புகளுக்கும் பெருங்காயம் பேருதவியாக செயல்படுகிறது.

ஏலக்காய்

இனிப்பு மற்றும் அசைவு உணவுகளில் சுவையை கூட்டவும் நறுமணத்தை பெருக்கவும் ஏலக்காய் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. வெறும் சுவையூட்டியாக மட்டுமில்லாமல் வயிற்று ஆரோக்கியத்தை மேம்படுத்த ஏலக்காய் பெரிதும் உதவுகிறது. சோறு சாப்பிட்டவுடன் உங்களுக்கு செரிமானப் பிரச்னை ஏற்பட்டால், இரண்டு ஏலக்காய் விதைகளை வாயில் போட்டால் போதும். உடனடியாக செரிமானக் கோளாறு நிவர்த்தியாகும். இதன் மருத்துவ குணம் பாக்டீரியாவை எதிர்த்து போராடுகிறது. வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்துகிறது.

click me!