எதுக்குமே தேவைப்படாது என்று தூக்கிப்போடும் முட்டை ஓட்டில் கூட இவ்வளவு நன்மைகள் இருக்கு... 

First Published Jun 30, 2018, 2:08 PM IST
Highlights
There are so many advantages to laying egg shell


இது எதுக்குமே தேவைப்படாது என்று தூக்கிப்போடும் முட்டை ஓட்டில் கூட இவ்வளவு நன்மைகள் இருக்கிறது. 

முதல் டிப்ஸ் 1. 

வேகவைத்து வைத்திருக்கும் முட்டையின் ஓடுகளை தான் இதற்கு பயன்படுத்த வேண்டும்.  முட்டையின் ஓட்டை நன்றாக மிக்ஸியில் அரைத்து பொடியாக்கிக் கொள்ளுங்கள். 

அத்துடன் இன்னொரு முட்டையை உடைத்து அதிலிருக்கும் வெள்ளைக்கருவை மட்டும் தனியாக பிரித்து மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் பொடியுடன் சேர்த்து நன்றாக கிளறுங்கள்.

பேஸ்ட் பதத்தில் அரைத்த இதனை முகத்தில் பூசி 20 நிமிடங்களில் கழுவிவிடலம. இது முகத்திற்கு ஈரப்பதத்தை வழங்கிடும். அத்துடன் ஃப்ரஷ்ஷாக வைத்திருக்கும்.

டிப்ஸ் 2. 

முகச்சுருக்கத்தை தடுக்க அதோடு முகச்சுருக்கம் வந்திருந்தால் அதனை தவிர்க்க இதனை செய்யலாம். 

முட்டையின் ஓட்டை பொடியாக்கிக் கொள்ளுங்கள் அத்துடன் தயிர் இரண்டு டேபிள் ஸ்பூன் கலந்து முகத்தில் பூசுங்கள். அது காய்ந்ததும் கழுவி விடலாம்.

டிப்ஸ் 3.

சருமத்தில் எங்காவது அலர்ஜி அரிப்பு ஏற்ப்பட்டிருந்தால் இந்த முறை உங்களுக்கு கை கொடுக்கும். 

பொதுவாக ட்ரை ஸ்கின்னாக இருப்பவர்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் நிறைய வரும். அவர்கள் ஆப்பிள் சிடர் வினிகரில் முட்டையின் ஓட்டை கலந்து ஐந்து மணி நேரம் ஊற வைத்திட வேண்டும். 

பின்னர் மெல்லிய துணியோ அல்லது காட்டன் பால் கொண்டு கலவையை தொட்டு அலர்ஜி வந்த இடத்தில் வைத்தால் நல்ல பலன் கிடைத்திடும்.

டிப்ஸ் 4.

கண்களுக்கு கீழே கருவளையம், வறட்சியால் ஏற்படும் மார்க்குகளை தவிர்க்க இதனை செய்திடுங்கள். 

முட்டை ஓடு பொடியை இரண்டு டீஸ்ப்பூன் எடுத்துக் கொள்ளுங்கள் அத்துடன் தேன் கலந்து கண்களைச் சுற்றி அப்ளை செய்து லேசாக மசாஜ் கொடுத்திடுங்கள். இதனை தினமும் செய்யலாம்.

டிப்ஸ் 5.

முட்டை ஓட்டில் கால்சியம் உட்பட பல்வேறு சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இவை சருமத்திற்கு மட்டுமல்ல பற்களுக்கும் நல்ல பலனளிக்கும். தினமும் பல் விளக்கியவுடன் முட்டையின் ஓட்டு பவுடரைக் கொண்டு பற்களை தேயுங்கள் இது நல்ல பலன் கொடுத்திடும்.

பின்குறிப்பு:

முட்டையின் ஓட்டை பயன்படுத்துவதற்கு முன்னால் நீங்கள் முக்கியமாக செய்ய வேண்டிய சில விஷயங்கள்...

முட்டையை இரண்டாக உடைத்த பின்னர் அதனை சுத்தமாக கழுவ வேண்டும். தண்ணீரை பாத்திரத்தில் பிடித்து கழுவுவதை விட ரன்னிங் வாட்டரில் கழுவினால் நல்லது.

அதனை சுத்தமாக கழுவிய பின்னர் ஒரு பாத்திரத்தில் போட்டு முழுவதும் நொறுங்கிடமாறு பொடி செய்யுங்கள். முடிந்தளவு சின்ன சின்ன துகள்களாக்கிவிடுங்கள்.

அதனை ஒரு ஷீட்டில் போட்டு 10 முதல் 15 நிமிடங்கள் வரை 150 டிகிரி ஹீட்டில் பேக் செய்யுங்கள். அப்போது தான் அதிலிருக்கும் கிருமிகள் அழிந்திடும். இப்போது இதனை பயன்படுத்தலாம்.

click me!