ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். இந்த பானம் மூலம்...

 
Published : Jun 30, 2018, 02:07 PM ISTUpdated : Sep 19, 2018, 02:35 AM IST
ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். இந்த பானம் மூலம்...

சுருக்கம்

Even a rupee can improve your health without cost. By this drink ...

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஓர் அற்புத பானம் இருக்கு. அதுதான் மஞ்சள் கலந்த துளசி நீர். இந்த நீரில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. 

தயாரிக்கும் முறை

ஒரு பாத்திரத்தில் நீரில் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து, அதில் சிறிது துளசி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, ஒரு கொதிக்கவிட்டு இறக்கினால் பானம் தயார்.

பயன்கள்:

சளி பிடிப்பதைத் தடுக்கும்

அடிக்கடி ஜலதோஷம் /சளி பிடிப்பவர்கள் இந்த நீரை குடித்து வந்தால், அதில் உள்ள மருத்துவ குணங்கள் நுரையீரலில் உள்ள அழற்சி மற்றும் சளித் தேக்கத்தைக் குறைத்து, சளி பிடிப்பதைத் தடுக்கும்

ஆஸ்துமா

துளசி நீரில் மஞ்சள் கலந்து குடித்தால், ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுபட்டு, நிம்மதியாக சுவாசிக்க உதவும்.

மன அழுத்தம் நீங்கும்

துளசி பானத்தை ஒருவர் தினமும் காலையில் குடித்து வந்தால், நரம்புகள் அமைதியாகி, மூளையில் இரத்த ஓட்டம் அதிகரித்து, மன அழுத்தத் திலிருந்து உடனடி விடுதலை பெற நிவாரணம் அளிக்கும்

சிறுநீரகம் சுத்தமாகும்

இதை வாரம் ஒருமுறை பருகி வந்தால் சிறுநீரகத்தில் படியும் உப்புகள் அகற்றப்பட்டு சிறுநீரகம் சுத்தமாகும். இடுப்பைச் சுற்றி வலியிருந்தால் சிறுநீரகத்தில் கோளாறு உள்ளது என்று அர்த்தம். நாம் தொடர்ந்து இந்தக் கஷாயத்தை வாரம் ஒருமுறை பருகி வர இடுப்பு வழி தீரும். அப்போது நமது சிறுநீரகம் சுத்தமாக இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

மலச்சிக்கல் நீங்கும்

நீங்கள் அடிக்கடி மலச்சிக்கலால் அவஸ்தைப்பட்டு வந்தால், இந்த பானம் குடலியக்கத்தை மேம்படுத்தி அப்பிரச்சனையை உடனடியாக தடுக்கும்

குடல் புண் சரியாகும்

இந்த இயற்கை பானத்தில் உள்ள மருத்துவ குணங்கள், வாய் மற்றும் வயிற்றில் உள்ள புண்களை சரிசெய்து, அல்சர் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.

அசிடிட்டி குறையும்

துளசி நீரில் மஞ்சள் கலந்து குடிப்பதால், நோயெதிர்ப்பு அழற்சி தன்மை, வயிற்றில் உள்ள அமிலத்தின் தீவிரத்தைக் குறைத்து, அசிடிட்டி பிரச்சனையைக் குறைக்கும்.

தலைவலி குணமாகும்

தினமும் காலையில் மஞ்சள் கலந்த துளசி தண்ணீரைக் குடிப்பதன் மூலம், சைனஸ் மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படும் தலைவலியில் இருந்து விடுபடலாம்.

செரிமானம் மேம்படும்

மஞ்சள் கலந்த துளசி நீரை தினமும் காலையில் ஒரு டம்ளர் குடித்து வந்தால், செரிமான பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.

கொலஸ்ட்ரால் பிரச்சனை தீரும்

இருப்பவர்கள் துளசி நீரில் மஞ்சள் கலந்து அதிகாலையில் எழுந்ததும் குடித்து வந்தால், கொழுப்பு செல்கள் கரைக்கப்பட்டு, கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் குறையும்.

PREV
click me!

Recommended Stories

Foot Sweating : கால் பாதத்தில் ரொம்ப வியர்க்குதா? இதுதான் 'காரணம்' உடனடி தீர்வுக்கு சூப்பர் வழி
Belly Fat Burning Exercises : வீட்டில் செய்யும் இந்த '4' எளிய பயிற்சிகள் போதும்! கொழு கொழுனு தொங்கும் தொப்பையை அப்படியே குறைக்கும்