உடலை ஆரோக்கியாமாகவும், வலுவாகவும் வைத்தக் கொள்ள உதவும் ஏழு நாள் சூப்பர் டயட்…

 
Published : Sep 28, 2017, 02:33 PM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
உடலை ஆரோக்கியாமாகவும், வலுவாகவும் வைத்தக் கொள்ள உதவும் ஏழு நாள் சூப்பர் டயட்…

சுருக்கம்

The seven-day Super Diet that helps the body stay healthy and strong ...

முதல் நாள்

பழங்களால் ஆன டயட்டே முதல் நாள் மெனு. பழங்களைத் தவிர காய்கறிகள், சாதம் எதையும் தொடவே கூடாது. தர்பூசணி, மாதுளை, ஆப்பிள், எலுமிச்சை, ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றைச் சாப்பிடலாம். வாழை, லிச்சி, மாம்பழம் மற்றும் திராட்சையைச் சேர்க்கக் கூடாது.

இரண்டாம் நாள்

முதல் நாள் பழங்களாகச் சாப்பிட்டதில் உடல் சற்று சோர்ந்திருக்கும். எனவே, போதிய எனர்ஜி கிடைப்பதற்காக வேகவைத்த ஓர் உருளைக்கிழங்கை ஒரு டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்துக் காலை உணவாகச் சாப்பிடலாம். வெண்ணெய் சேர்ப்பதால் நல்ல கொழுப்பு உடலில் சேரும். பின் காய்கறிகளைப் பச்சையாகவோ, எண்ணெய் சேர்க்காமல் வேகவைத்தோ மதியமும் இரவும் சாப்பிடலாம். கீரைகளையும் வேகவைத்துச் சாப்பிடலாம். முட்டைகோஸ், கேரட், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளை சாலட் செய்து நிறையவே சாப்பிடலாம்.

மூன்றாம் நாள்

வாழைப்பழம், உருளைக்கிழங்கைத் தவிர்த்து மற்ற காய்கறி, பழங்கள், கீரைகளைச் சாப்பிடலாம். சாலட், சமைத்தது என எந்தவிதத்திலும் காய்கறிகளை எடுத்துக்கொள்ளலாம்.

நான்காம் நாள்

ஒரு டம்ளர் பால் (ஸ்கிம்டு மில்க்) மற்றும் இரண்டு வாழைப்பழங்களை தலா மூன்று வேளையும் சாப்பிட வேண்டும். கடந்த மூன்று நாட்களாக ஜி.எம் டயட் பின்பற்றி இருப்பதால், உடலில் சோடியத்தின் அளவு குறைந்திருக்கும், வாழைப்பழத்தை உட்கொள்வதன் மூலம் உடலுக்கு வேண்டிய சோடியம் மற்றும் பொட்டாசியத்தைப் பெறலாம். பால் மற்றும் வாழைப்பழத்துடன் தக்காளி, வெங்காயம், குடமிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து, சூப் செய்து குடிக்கலாம்.

ஐந்தாம் நாள்

முளைகட்டிய பயறை வேகவைத்துச் சாப்பிடலாம். அல்லது பிரவுன் அரிசி சாதத்துடன் தயிரும் தக்காளியும் சேர்த்துச் சாப்பிடலாம். ஐந்தாம் நாளில் தக்காளி அவசியம் இருக்க வேண்டும். மேலும், வேகவைத்த சிக்கன் அல்லது மீல் மேக்கருடன் காட்டேஜ் சீஸையும் சேர்த்துக்கொள்ளலாம். இந்த நாளில் ஒரு பவுல் சூப்பும் எடுத்துக்கொள்ளலாம்.

ஆறாம் நாள்

ஐந்தாம் நாள் பின்பற்றியதைப்போல முளைகட்டிய பயறு அல்லது பிரவுன் அரிசி சாதத்துடன் தயிர் சாப்பிடலாம். சிக்கன் அல்லது மீல் மேக்கருடன் காட்டேஜ் சீஸ் சாப்பிடலாம். இதர காய்கறிகளும் சாப்பிடலாம். ஆனால், தக்காளி சேர்க்கக் கூடாது. சூப் குடிக்கலாம்.

ஏழாம் நாள்

பிரவுன் அரிசி சாதத்துடன் காய்கறிகள், கீரைகள், பழங்கள் என எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். முடிந்தவரை சாதத்தைக் குறைத்துக்கொண்டு காய்கறிகள், பழங்களை உண்பது மிகவும் நல்லது.

பின் குறிப்பு

ஒவ்வொரு நாளும் தவறாமல் 45 நிமிடங்கள் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். களைப்பாக இருந்தால் போதிய ஓய்வு எடுத்துவிட்டு உடற்பயிற்சியைத் தொடர வேண்டும். ஜி.எம் டயட்டில் உடற்பயிற்சியும் ஓர் அங்கம்.

எனவே, தினமும் குறைந்தது 10 ஆயிரம் அடி அல்லது 3 கி.மீ. தூரம் நடப்பது. அரை மணி நேரம் நீந்துவது, சைக்கிளிங் போவது போன்ற கார்டியோ பயிற்சிகளை செய்யலாம்.

ஏழு நாளும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.

உங்களின் மருத்துவர் அல்லது டயட்டீஷியனிடம் தொடர்ந்து அறிவுரை பெற வேண்டும். அளவுக்கு அதிக சோர்வு, படபடப்பு, மயக்கம் இருந்தால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள், முதியவர்கள் இந்த டயட்டை முயற்சிக்க வேண்டாம்.

PREV
click me!

Recommended Stories

Blood Clot : இரத்தக் கட்டை வலியில்லாமல் 'குணமாக்கும்' சூப்பரான வீட்டு வைத்தியங்கள்!! ட்ரை பண்ணி பாருங்க
Winter Skincare Tips : பனியால் சருமத்தில் ஏற்படும் சொறியைத் தடுக்க ஈஸியான வழிகள்!