மூளையின் செயல்பாட்டை அதிகரித்து மனநலத்தை பாதுகாக்கும் சில ஆரோக்கியமான உணவுகள் இதோ…

First Published Sep 28, 2017, 2:31 PM IST
Highlights
Here are some healthy foods that enhance the function of the brain and protect mental health.


* மூளையின் செயல்பாடுகள் சிறப்பாக நடக்க முட்டைக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அதில் வைட்டபின் பி, அயோடின், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், துத்தநாகம், புரதம் போன்றவை உள்ளடங்கி இருக்கின்றன. அவை மூளையின் இயக்கத்திற்கு நலம் சேர்க்கும்.

* வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்திருக்கிறது. மேலும் டிரிப்டோபன் என்ற பொருளும் இருக்கிறது. அது சந்தோஷமான ஹார்மோனான செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்க உதவும்.

* ஸ்ட்ராபெர்ரி பழத்திலும் பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது. அத்துடன் வைட்டமின் சியும் கலந்திருக்கிறது. இவை நரம்புகளை தூண்டுவதற்கு துணை புரியும். மனநிலையையும் மேம்படுத்த உதவும்.

செர்ரி பழத்திலும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. அது ரத்த அழுத்தம் சீராக நடைபெற வழிவகுக்கும். மூளையில் ஏற்படும் அழற்சியை குறைத்து மனநிலை சீராக இருக்க தூண்டும்.

* தேங்காய், மூளையின் ஆரோக்கியத்திற்கு நன்மை சேர்க்கும் பொருளாகும். இதில் நல்ல மனநிலையை உண்டாக்கும் விசேஷ கொழுப்பும் உள்ளடங்கி இருக் கிறது.

* கருமை நிற சாக்லேட் மனநிலையை மேம்படுத்த உதவும். மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் தன்மையும் அதற்கு உண்டு. எனினும் அதில் கலோரிகள் அதிகமாக இருக்கும். அதனால் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

* உடல் ஆரோக்கியத்தை பல விதங்களில் மேம்படுத்துவதில் தேனுக்கு முக்கிய பங்கு உண்டு. மூளையில் ஏற்படும் அழற்சியை குறைக்கவும் உதவுகிறது. அதன் மூலம் மன அழுத்தம் ஏற்படுவதை தடுத்து மூளையையும், மனநலனையும் ஆரோக்கியமாக வைத்திருக்க துணைபுரியும்.

click me!