விதவிதமான லஸ்ஸி வகைகள்; அவற்றைக் குடிப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்;

 
Published : Sep 28, 2017, 02:29 PM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
விதவிதமான லஸ்ஸி வகைகள்; அவற்றைக் குடிப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்;

சுருக்கம்

Different types of lassi The benefits we get from drinking them

பால், தயிர், மோர், நெய்… பால் பொருள்கள் நமக்குப் புதிதல்ல. ஆதிகாலத்திலிருந்து தமிழரின் உணவுப் பழக்கத்தில் மிக முக்கியமான இடம் இந்த ஆரோக்கிய உணவுகளுக்கு எப்போதும் உண்டு.

`லஸ்ஸி’ என்கிற பெயர் மட்டும்தான் தமிழ் அல்ல. மற்றபடி, தயிரில் சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும் இதன் செய்முறையை முயன்று, ருசி பார்க்காத தமிழ் மக்கள் இருக்க முடியாது.

இது, தயிருடன் சர்க்கரை, தண்ணீர், சில நறுமணப் பொருள்கள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. லஸ்ஸிக்கும் ஒரு சுவாரஸ்யமான வரலாறு இருக்கிறது. ஆயுர்வேதத்தில் இதற்கு ‘ரஸாலா’ என்று பெயர். இதைப் பற்றிய குறிப்பு ஆயுர்வேதத்தில் மட்டுமல்ல, புராணங்களிலும் இடம்பெற்றிருக்கிறது.

மகாபாரத காலத்திலேயே இது பயன்படுத்தப்பட்டதாக பழமையான ஆயுர்வேத நூல்கள் குறிப்பிடுகின்றன. கண்ணன், பீமனுக்கு இந்த பானத்தை தயாரித்துக் கொடுத்திருக்கிறாராம். இதற்கு `பீம சேன சீகாரணி’ என்று பெயராம்.

சத்ரபதி சிவாஜி காலத்தில் வாழ்ந்த ஆயுர்வேத அறிஞர் ரகு நாத சூரி, தான் எழுதிய ‘போஜன குதூகலம்’ என்ற ஆயுர்வேத நூலில் இதன் மகத்துவத்தையும் பல வகையான லஸ்ஸி தயாரிப்பு முறைகளைப் பற்றியும் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பலன்களும் சத்துகளும்

இதில் கால்சியம், வைட்டமின் பி 12, துத்தநாகம், புரோட்டீன் உள்ளிட்ட உடலுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துகள் நிறைவாக உள்ளன.

நோய் எதிர்ப்பு சக்தி

பொதுவாகவே பால் பொருட்கள் உடலுக்கு நன்மைசெய்யும் பாக்டீரியாக்களை அதிகரிக்கக்கூடிய புரோபயாட்டிக்ஸ் (Probiotics) நிறைந்த உணவுகள். இவை, வயிற்றில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிப்பதுடன், நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கவும் உதவும். இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

செரிமானம்

லஸ்ஸியில் உள்ள ஊட்டச்சத்துகள் செரிமானத்துக்கு தேவையான என்சைம்களை அதிகரித்து, செரிமானத்துக்கு உதவும். உடலின் ஜீரண சக்தியை பலப்படுத்தும்.

வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்

மலச்சிக்கல், வயிற்றுப் புண், வயிறு உப்புசம் உள்ளிட்ட வயிற்று உபாதைகளைச் சரியாக்கும்.

பற்கள், எலும்புகளை வலுவாக்கும்

லஸ்ஸியில் கால்சியம் அதிக அளவில் உள்ளது. இது நம் எலும்புகளும் பற்களும் வலிமையாக உதவுகிறது. மேலும், எலும்பு தேய்மானம் போன்ற நோய்கள் வருவதையும் தடுக்கிறது.

உடனடி எனர்ஜி

வைட்டமின் பி 12 ரத்தத்தில் உள்ள குளூக்கோஸை ஆற்றலாக மாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் வைட்டமின் பி 12 இருப்பதால், ஒரு டம்ளர் லஸ்ஸி குடித்தால் உடனடி ஆற்றல் கிடைக்கும். தொடர்ச்சியாக, லஸ்ஸி சாப்பிட்டு வந்தால், வைட்டமின் பி 12 (Vitamin B12 Deficiency) குறைபாட்டு நோய் நீங்கும்.

தசைகளை வலிமையாக்கும்

லஸ்ஸியில் புரோட்டீன் நிறைவாக உள்ளது. இது தசைகளை வலிமையாக்கும். உடற்பயிற்சி செய்கிறவர்கள், பாடி பில்டர் போன்றவர்களுக்கு சிறந்த ஊட்டச்சத்து உணவு.

கோடைகால நோய்களை நீக்கும்

கோடைகாலத்தில் வெப்பத்தால் ஏற்படும் வியர்குரு, இரைப்பை (Gastro Intestinal) நோய்களிலிருந்து பாதுகாக்கும்.

உடலுறவில் நாட்டம் உண்டாகும்

லஸ்சியில் உள்ள ஊட்டச்சத்துகளுக்கு உடலுறவில் நாட்டம் உண்டாக்கும் சக்தி இருக்கிறது. புரோபயாட்டிக்ஸ் உணவு என்பதால், ஆண்மைக்குறைவைத் தடுக்கவும் உதவும்.

ரஸாலா லஸ்ஸி

தேவையானவை:

தயிர் – 1 கப்

சர்க்கரை – 1 தேக்கரண்டி

தேன் – சர்க்கரையில் நான்கில் ஒரு பங்கு

நெய், சுக்கு, மிளகு, லவங்கப் பொடி – சிறிதளவு.

செய்முறை:

தயிருடன் சர்க்கரை, தேன் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். அத்துடன் சிறிது நெய் சேர்த்து, ஒரு சிட்டிகை சுக்கு, மிளகு, லவங்கப் பொடி சேர்த்தால் ரஸாலா ரெடி. இதை மண்பானையில் சிறிது நேரம் வைத்திருந்து பயன்படுத்துவது சிறந்தது. இது, உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும்; உடல் சோர்வை நீக்கும்.

கற்பூர லஸ்ஸோ

தேவையானவை:

தயிர் – 1 கப்

வெல்லம் – தேவையான அளவு

பச்சைக் கற்பூரம் – சிறிதளவு.

செய்முறை:

தயிருடன் வெல்லத்தைக் கலந்துகொள்ளவும். இதை நல்ல சுத்தமான துணியால் வடிகட்டி, சிறிது பச்சைக் கற்பூரம் கலந்து பருகலாம். அதிக உடலுழைப்பு உள்ளவர்களுக்கு மிகவும் ஆற்றல் தரக்கூடியது.

ஏலாக்காய் லஸ்ஸி

தேவையானவை:

தயிர் – 1 கப்

கற்கண்டு – 1/2 கப்

ஏலக்காய், மிளகு, கிராம்பு – சிறிதளவு.

செய்முறை:

புளிப்பில்லாத தயிரில் கற்கண்டு சேர்த்து, அதைத் துணியால் வடிகட்டி மண் பானையில் ஊற்றிக்கொள்ளவும். அதோடு பால், சிறிது ஏலக்காய், மிளகு, கிராம்பு சேர்த்துப் பருகினால் வெயில் காலத்தில் ஏற்படும் பலவீனம் நீங்கி, புத்துணர்வு கிடைக்கும். உடலுறவில் நாட்டம் அதிகரிக்கும்.

PREV
click me!

Recommended Stories

Pomegranate Benefits : தினமும் தவறாமல் ஒரு கிண்ணம் 'மாதுளை' சாப்பிட்டால் இந்த '5' பிரச்சினைகள் கிட்ட கூட வராது!
Men’s Skincare : 30 வயசு முடிஞ்ச ஆண்கள் முதல்ல 'இதை' செய்ங்க! எப்போதும் இளமையா, ஆரோக்கியமா இருப்பீங்க