உங்களுக்குத் தெரியுமா? சளி, இருமல் போன்றவற்றை தணிக்கும் சக்தி ஆடாதொடைக்கு உண்டு…

Asianet News Tamil  
Published : Sep 27, 2017, 01:26 PM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
உங்களுக்குத் தெரியுமா? சளி, இருமல் போன்றவற்றை தணிக்கும் சக்தி ஆடாதொடைக்கு உண்டு…

சுருக்கம்

Do you know aadathodai cures Cold cough etc ...

ஆடாதொடை செடி நீண்ட, முழுமையான ஈட்டி வடிவ இலைகளையும், வெள்ளைநிற பூக்களுடன் 15 அடி வரை வளரக்கூடியது. இதனுடைய இலை மட்டுமே அரை அடி வரை நீண்டிருக்கும். இதன் இலை, பூ மற்றும் வேர்கள் மருத்துவ குணம் கொண்டவை.

இவை தமிழில் வாதகி, நெடும்பர், அட்டகசம், ஆடா தொடை, ஆடு தொடா என்று கூறப்படுகிறது.

நீண்ட முழுமையான ஈடிவடிவ இலைகளையும் வெள்ளைநிறப் பூக்களையும் உடைய குறுஞ்செடி. சிற்றுர்களில் வேலியில் வைத்து வளர்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இலை, பூ, வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

1.. சளி நீக்கி இருமல் தனிப்பனாகவும், வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும், இசிவு நோய் நீக்கியாகவும் செயற்படும்.

2.. இலைச் சாரும் தேனும் சமஅளவு கலந்து சர்க்கரை சேர்த்து தினம் 4 வேளை கொடுக்க நுரையீரல் இரத்த வாந்தி, கோழை மிகுந்து மூச்சுத் திணறல், இருமல், இரத்த கலந்த கோழை வருதல் ஆகியவை குணமாகும்.

3.. இலைச்சாறு 2 தேக்கரண்டி எருமைப்பாலில் காலை, மாலை கொடுத்து வரச் சீதப்பேதி, இரத்தப்பேதி குணமாகும்.

4.. 10 இலைகளை அரை லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சிக் தேன் கலந்து காலை, மாலை 40 நாள்கள் பருகி வர என்புருக்கிக் (T.B) காசம், இரத்தக் காசம், சளிச்சுரம், விலாவலி ஆகியவைத் தீரும்.

5.. ஆடாதொடை வேருடன் கணடங்கத்திரி வேர் சமனளவு சேர்த்து இடித்துச் சலித்து அரை முதல் 1 கிராம் வரை தேனில் சாப்பிட்டு வர நரம்பு இழுப்பு, சுவாச காசம், சன்னி, ஈளை, இருமல், சளிச்சுரம், என்புருக்கி, குடைச்சல் வலி ஆகியவை குணப்படும்.

6.. ஆடாதொடை இலையையும், சங்கன் இலையையும் வகைக்கு ஒரு பிடி அரை லிட்டர் நீரில் போட்டுப் பாதியாகப் காய்ச்சிக் காலை, மாலை பருகி வர குட்டம், கரப்பான், கிரந்தி, மேகப்படை, ஊறல், விக்கல், வாந்தி, வயிற்றுவலி தீரும்.

7.. உலர்ந்த ஆடாதொடை இளைத்தூளை ஊமத்தை இலையில் சுருட்டிப் புகைப்பிடிக்க மூச்சுத் திணறல் உடனே தீரும்.

8.. 700 கிராம் தூய இலைகளை நறுக்கி நெய்யில் வதக்கியதில் அக்கரகாரம், சித்தரத்தை வகைக்கு 10 கிராம், இலவங்கம் 10 கிராம், ஏலம் 4 ஆகியவற்றைக் தூள் செய்து போட்டுப் பொன் வறுவலாய் வறுத்து 2 லிட்டர் நீர்விட்டு 1 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டியதில் 1 9.. கிலோ சர்க்கரை சேர்த்துக் தேன் பதமாகக் காய்ச்சி (ஆடாதொடை மணப்பாகு) வெந்நீரில் ஒரு தேக்கரண்டி கலந்து சாப்பிட்டு வர நீர்க்கோவை தீரும். ஒரு நாளைக்கு 3 வேலையாக நீண்ட நாள்கள் கொடுத்து வரக் காசம், என்புருக்கி, மார்ச்சளி, கப இருமல், புளுரசி, நீர்த்த ஆஸ்துமா, நிமோனியா ஆகியவை குணமாகும். குரல் இனிமை உண்டாகும்.

10.. ஆடாதொடை, கோரைக்கிழங்கு, பற்பாடகம், விஷ்ணுகாந்தி, துளசி, பேய்ப்புடல், காஞ்சாங்கோரை, சீந்தில் வகைக்கு ஒரு பிடி 1 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வேலைக்கு 50 மி.லி அளவாகப் பருகி வர (அஷ்ட மூலக் கஷாயம்) எவ்விதச் சுரமும் நீங்கும்.

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake