நாள்பட்ட நுரையீறல் அடைப்பு மற்றும் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச பாதிப்புகள், உலகளவில் ஒவ்வொடு ஆண்டும் இறப்புக்கான முக்கிய காரணங்களாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உடலின் மற்ற பாகங்களைப் போலவே நுரையீரலும் மிக முக்கியமான உறுப்பு. எனினும் நுரையீரலுக்கு கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய், ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்னைகள், உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் இறப்புக்கான முக்கிய காரணங்களாக உள்ளன. நுரையீரல் புற்றுநோயைத் தவிர மற்ற நுரையீரல் பாதிப்புகளால் ஒவ்வொரு ஆண்டும் 235,000 பேர் இறந்துபோகின்றனர். புகைபிடித்தல் உட்பட நாம் சுவாசிக்கும் நச்சுக் காற்று, மாசுபாடு மற்றும் தூசி ஆகியவை நுரையீரல் ஆரோக்கியத்தைப் பாதிக்கின்றன. சில ஆரோக்கியமான பழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம், நுரையீரல் ஆரோக்கியத்தை சிறந்த முறையில் பராமரிக்க முடியும். சுவாச பிரச்சனைகளின் அறிகுறிகளை அடையாளம் காண்பது மிகவும் முக்கியம்.
மூச்சு திணறல்
undefined
நாள்பட்ட மூச்சுத் திணறல் பிரச்சனையை பலர் எதிர்கொள்கின்றனர். திடீர் மூச்சுத் திணறல் சில உடல்நலப் பிரச்சினைகளின் அறிகுறியாகும். ஆக்ஸிஜனை வழங்குவதிலும் கார்பன் டை ஆக்சைடை அகற்றுவதும் தான், நுரையீரல் திசுக்களுக்கான முக்கிய பணி ஆகும். இந்த செயல்முறைகளில் ஏதேனும் ஒரு பிரச்சனை ஏற்படுவது சுவாசத்தை பாதிக்கிறது. இரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைவாக உள்ளவர்களின் சருமம் நீல நிறத்தில் இருக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நிலை சயனோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. இது மூச்சுத் திணறலின் முக்கியமான அறிகுறியாகும்.
மூச்சுத் திணறலுக்கான காரணங்கள்
ஆஸ்துமா, காற்றுமாசு குறைபாடு, நுரையீரலில் அதிகப்படியாக திரவம் சேர்வது, நாட்பட்ட அடைப்பு நுரையீரல் நோய், காசநோய், நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் மற்றும் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்படும். ஒருசிலருக்கு தொடர்ந்து அதிகளவில் நடப்பது, ஓடுவது மற்றும் சத்தம்போட்டு சிரிப்பதன் காரணமாகவும் மூச்சுத் திணறல் வரலாம். இது உங்களுக்கு 3 நாட்களுக்கும் மேலாக தொடரும் பட்சத்தில், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
நிமோனியா
நிமோனியா என்பது நுரையீரல் தொற்று ஆகும். இதனால் நுரையீரலில் திரவம் சேர்வது மற்றும் சீழ் படிவது போன்ற பிரச்னைகள் ஏற்படும். இதற்கு உரிய முறையில் சிகிச்சை பெறாமல் விட்டால், உயிருக்கு ஆபத்தான நிலை கூட வரலாம். மூச்சு திணறல், இருமல், நெஞ்சு வலி ஆகியவை முதற்கட்ட அறிகுறிகளாகும். அதை தொடர்ந்து திடீரென குளிர்வது, விடாமல் காய்ச்சல் அடிப்பது, தசைகளில் வலி ஏற்படுவது, எப்போதும் உடம்பு சோர்வாக காணப்படுவது அடுத்தக்கட்ட அறிகுறியாகும்.
சாப்பிட்டு முடிந்ததும் இதைச் செய்து பாருங்கள்- அற்புதம் நடக்கும் நம்புங்கள்..!!
எபிக்லோட்டிடிஸ்
மூச்சுக்குழாயை மூடியிருக்கும் திசுக்கள் வீங்கினால் ஏற்படுவது தான் எபிக்லோட்டிடிஸ் பிரச்னை. இது உடனடி மருத்துவ கவனிப்பு தேவைப்படும் உயிருக்கு ஆபத்தான நோயாகும். தொடர் காய்ச்சல், தொண்டையில் வலி, அதிகளவு எச்சில் ஊறுவது, நீலநிறமாக தோல் மாறுவது, சுவாசம் மற்றும் விழுங்குவதில் சிரமம் ஏற்படுவது, பேச முடியாமல் போவது உள்ளிட்டவை எபிக்லோட்டிடிஸ் பிரச்னைக்கான முக்கிய அறிகுறிகளாகும். இந்த நோய்த் தொற்று பெரியவர்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு. அதனால் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, இந்நோய் வராமல் இருப்பதற்கான தடுப்பூசி போடப்படுகிறது.