சளி, கபம், மூச்சுத்திணறலை ஓட ஓட விரட்டும் சூப்பர் சூப்.!!

By Dinesh TG  |  First Published Nov 2, 2022, 2:23 PM IST

பருவநிலை மாறி மழைக்காலம் துவங்கும் போது பலருக்கும் சைனஸ் பிரச்சனைகள்  ஆரம்பிக்கும். நெற்றியில் அழுத்தம் ஏற்பட்டு, தலைவலி அதிகரித்து கண்களில் வேதனையை சந்திக்கின்றனர். இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது இந்த பிரச்சனையிலிருந்து விடுபட நீங்கள் வீட்டில் என்ன செய்யலாம் என்பதை குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
 


தற்போது நம்மைச் சுற்றி சைனஸ் பிரச்னையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை பார்த்து வருகிறோம். இதற்கு காற்று மாசு மற்றும் உணவுப் பழக்கம் உள்ளிட்டவை காரணமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நீங்கள் சைனஸ் பிரச்னையால் அவதிப்படுபவராக இருந்தால், மருத்துவரை அணுகுவது மிகவும் முக்கியம். ஒருவேளை முடியாத பட்சத்தில் ஆவிப் பிடிப்பது, ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுகளை சாப்பிடாமல் இருப்பது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது பயன் தரும். அதே சமயம், சைனஸ் பிரச்சனைகளைத் தவிர்க்க சில உணவுக் குறிப்புகளைப் பின்பற்றுவதும் நல்ல பயனை அளிக்கும்.

இருக்கவே இருக்கு சூப்

Tap to resize

Latest Videos

நிபுணர்களின் கூற்றுப்படி, சூப் சைனஸ் பிரச்சனைக்கு இயற்கையான தீர்வாகும். இதை அருந்துபோது உடலுக்குள்ளே சூடு உருவாகிறது. அதனால் சைனஸால் ஏற்படும் தொண்டை வலி, சளித் தொந்தரவு உள்ளிட்டவற்றைக் குறைக்கிறது. இதனால் சுவாசப் பிரச்சனைகள் உடனடியாக நீங்குகின்றன. அதை எவ்வாறு தயாரிப்பது? இதன் பலன்கள் என்னவென்று விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

சூப் செய்ய தேவையான பொருட்கள்

- 2-3 நடுத்தர அளவிலான முட்டைக்கோஸ் (அவற்றை நறுக்கவும்)
- 2 நடுத்தர அளவிலான வெங்காயம்
- 1 டீஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி
- 2-3 தேக்கரண்டி தரையில் கருப்பு மிளகு
- 2 துண்டுகள் பச்சை ஏலக்காய்
- 2 சிட்டிகை ருசிக்கு ஏற்றவாறு உப்பு

நல்ல ஒரு அகலமான பாத்திரத்தில், மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் கலந்து நன்றாக கொதிக்க வைக்கவேண்டும் அல்லது குக்கரில் சேர்த்து இரண்டு மூன்று விசில் விட்டு எடுக்கலாம். சூப் சரியாக வேகும் வரை குறைந்த தீயில் சிறிது நேரம் வைத்து சமைத்தால், அதனுடைய பலன் பன்மடங்கு அதிகரிக்கும்.

சூப் ஏன் தேவைப்படுகிறது?

முட்டைக்கோஸ் சேர்க்கப்பட்ட இந்த சூப் சைனஸ் பிரச்னைக்கு மட்டுமில்லாமல், உடலில் இருந்து அதிகப்படியான திரவத்தை அகற்றுவதற்கும் தீர்வாக அமைகிறது. மேலும் வயிற்றுப் பிரச்சினைகளுக்கு நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் இஞ்சி இருப்பதால் மூச்சுக்குழாய் தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும். இஞ்சி உடலில் திரவ சுழற்சியை அதிகரிக்கிறது. இதில் ஆண்டி ஆக்சிடண்டுகள் அதிகம் காணப்படுகின்றன. மூச்சுக் குழாயில் ஏற்படும் வீக்கத்தை இதை கட்டுப்படுத்துவதால், மூச்சுத்திணறல் போன்ற பிரச்னைகள் உடனடியாக நீங்கிவிடும்.

ஆஸ்துமா, சிறுநீரகக் கோளாறு, எலும்பு தேய்மானம் உள்ளிட்ட பிரச்னைகளை தீர்க்க இந்த ஒரு இலை போதும்..!!

சூப்பில் வேறு என்ன பொருட்களை சேர்க்கலாம்?

ஹிப்பாலி, ஏலக்காய், இலவங்க இலைகள், கறிவேப்பிலை போன்ற மூலிகை ஆரோக்கியம் கொண்ட இலைகளை சூப்பில் சேர்ப்பதில் நிறைய பயன்கள் உண்டு. இது உடலின் இயற்கையான குணப்படுத்தும் சக்தியை அதிகரிக்கிறது. சளி மற்றும் சைனஸ் பிரச்சனைகளுக்கு இயற்கை நிவாரணம் அளிக்கிறது. 

யாரெல்லாம் இந்த சூப்பை குடிக்கலாம்?

இந்த சூப் கிட்டத்தட்ட அனைத்து வயதினருக்கும் பயனுள்ளதாக இருக்கும். உங்களுக்கு ஏதேனும் உணவுப் பிரச்சனை இருந்தால், அதை உட்கொள்ளும் முன் மருத்துவரை அணுகவும். உங்கள் உடல்நிலை ஏற்கனவே மோசமாக இருந்தால், உணவில் ஏதேனும் பெரிய மாற்றங்களைச் செய்வதற்கு முன் மருத்துவரைச் சந்தித்து சந்தேகத்தை தீர்த்துக் கொள்வது அவசியம். வீட்டிலேயே சுலபமாகச் செய்யக்கூடிய இந்த சூப்பில் அனைத்துப் பொருட்களும் பயன்படுத்தப்பட்டாலும், இதில் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஏதேனும் ஒவ்வாமை இருந்தால், அதைத் தவிர்க்கவும். 

click me!