பொது வியாதியான ஞாபக மறதி பற்றி உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்…

First Published Sep 11, 2017, 12:25 PM IST
Highlights
Some of the information you do not know about public health memories ...


உலகம் தோன்றிய காலம் முதல் பல வகையான நோய்களுக்கு மனிதன் அவதிப்பட்டு கொண்டுதான் இருக்கிறான். அத்தகைய நோய்களில் ஞாபக மறதியும் ஒன்று.

மூளையின் இயக்கத்தை பல வகையில் பாதிக்கும் ஞாபக மறதி நோயை “மூளை மழுங்கு” நோய், “நினைவு திறன் இழப்பு” நோய் என்றும் சொல்வர்.

மூளையின் செயல்பாட்டை படிப்படியாக மழுங்கடிக்கும். அல்ஸிமர் நோய் படிப்படியாக அதிகரிக்க கூடிய அதே சமயத்தில் பழைய நிலைக்கு மீள முடியாததுமான குணத்தை உடையது. இதை டி-ஜெனெரேட்டிவ் ஒழுங்கிண்மை என்பர்.

நோயின் பாதிப்பு அதிகரிக்கும்போது மூளையில் பல இடத்தில் உள்ள செல் சுருங்கி அழிந்துவிடும். இதனால் தகவல் பரிமாற்றம் பாதிக்கப்படுகிறது.

இந்நோய் வயோதிகத்தின் காரணமாகவும், மரபு ரீதியாகவும், தலையில் அடிபடுதல் போன்றவை காரணமாகவும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இது, ஆண்களைவிட பெண்களை அதிகமாக பாதிக்கிறது.

வாழ்க்கை முறையிலுள்ள மாற்றம் காரணமாகவும் இந் நோய் தாக்குதல் ஏற்படுகிறது.

உயர் இரத்த அழுத்தம்,அதிகப்படியான கொழுப்பு சத்து,உணவு முறை உட்பட பல விஷயங்கள் இந் நோய்க்கு காரணிகளாக உள்ளன என்று ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

இந்த நோயை மருந்துகளின் மூலம் ஆரம்ப நிலையில் கட்டுப்படுத்தலாம். ஆனால் நிரந்தர தீர்வு கிடையாது.

ஆரோக்கியமான உணவுடன், தொடர்ந்த உடற்பயிற்சி, யோகா, தியானம், புத்தகம் படித்தல், சுடோகு பயிற்சி, வலதுகை பழக்கம் உள்ளவர்கள் இடதுகையிலும், இடக்கை பழக்கம் உள்ளவர்கள் வலது கையிலும் செயல்களை செய்தால் மூளைக்கு பலம் கூடும். ஞாபக மறதியும் தீரும்.

click me!