இரத்த நாள அடைப்பை குணப்படுத்த வேண்டுமா? இதோ எளிய வீட்டு மருந்துகள்…

 
Published : Sep 11, 2017, 12:16 PM ISTUpdated : Sep 19, 2018, 01:10 AM IST
இரத்த நாள அடைப்பை குணப்படுத்த வேண்டுமா? இதோ எளிய வீட்டு மருந்துகள்…

சுருக்கம்

Want to heal the blood vessel? Here are simple homemade drugs ...

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இரத்த நாள அடைப்பு பிரச்சனை வரலாம். இந்த இரத்த நாள அடைப்பை எளிய வீட்டு மருந்துகள் மூலம் குணப்படுத்தலாம்.

** இதயத்திற்கு வெளியே உள்ள சுத்த இரத்தக் குழாய்கள் சுருங்குவதை பெரிப்ரல் ஆர்ட்டீரியல் டிசிஸ் என்று அழைப்பர்.

ஒருவித கெட்ட கொழுப்பு கரைபடுவதால் இது உருவாகிறது. இரத்த நாளங்களில் `பிளேக்’ என்று சொல்லக் கூடிய அழுக்கானது படியலாம். இது கையிலும் படியலாம். காலிலும் படியலாம். இதனால் சுத்தமான இரத்த நாளங்கள் அடைபடுகின்றன.

** இரத்தம் போவது தடைபடுகிறது. குறிப்பாக, காலுக்கு இரத்தம் செல்வது தடைபடுகிறது. இரத்தம் போகாவிட்டால், என்ன நேரிடும்?

** அங்குள்ள திசுக்கள் அழியும். இதனால் காலை எடுக்க வேண்டிவரும். இதற்கு முக்கியமான காரணம் புகைபிடித்தல். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் இது வரலாம். அதிக கொழுப்பு உள்ளவர்கள், அதிக மன அழுத்தம் உள்ளவர்கள், இதய நோய் உள்ளவர்களிடம் இது காணப்படும்.

** சிலருக்கு வலி, மரத்துப் போதல், குத்துதல், கால் ஆடுசதையில் வலி போன்றவை காணப்படும். காலில் நாடிப் பார்க்க வேண்டும். அப்பொழுது காலில் புண்கள் வரும். குறிப்பாக விரல்கள், பாதங்கள் இவற்றில் புண் வந்தால் ஆறாது, நாள்பட்டு ஆறும்.

** காலினுடைய நிறம் சற்று நீல நிறத்தில் காணப்படும். ஒரு காலின் சூடு, அடுத்த காலின் சூட்டிலிருந்து மாறுபடும். நகங்களில் மாறுபாடு காணப்படும். ஆண்மைக் குறைவு ஏற்படும். குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை வரலாம்.

கட்டுப்படுத்தும் வழிகள்:

இவர்கள் உடற்பயிற்சி, உணவு முறை, கொழுப்பை குறைக்கிற மருந்துகள், இரத்த அழுத்தத்தை குறைக்கிற மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

வேலை செய்யும்போது ஆடுசதையில் வலி வரும். ஓய்வு எடுத்தால் குறைந்துவிடும். இரத்தம் போகாததுதான் இதற்குக் காரணம். இதற்கு நவீன அறுவைசிகிச்சைகள் உள்ளன. இவர்கள் பொதுவாகவே நடந்தால் வலி ஏற்படுகிறது என்பார்கள்.

5 நிமிடம் ஓய்வெடுத்த பின் வலி குறைந்து விட்டது’ என்று சொல்வார்கள். இவர்களுக்கு டாப்ளர் டெஸ்ட் என்று சொல்லக்கூடிய காலில் இரத்தம் எவ்வாறு ஒடுகிறது என்று பார்க்கும் சோதனையை செய்ய வேண்டும்.

ஆஞ்சியோகிராபி பரிசோதனை செய்து பார்ப்பவர்களும் உண்டு. புகையிலையை அறவே ஒழிக்க வேண்டும்.

ஐந்து கிராம் கொள்ளுடன், சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்றாக அரைக்கவும். இதை 2 டீஸ்பூன் அளவுக்கு எடுத்து சாதத்துடன் சேர்த்து, நல்லெண்ணெய்விட்டுப் பிசைந்து சாப்பிட்டுவந்தால் கொழுப்பு அடைப்பு குறையும்.

ஒழுங்காக உடற்பயிற்சி செய்ய வேண்டும். நீரிழிவு நோய், கொழுப்பு, இரத்த அழுத்த நோய் போன்றவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்.

பூண்டு பற்களை நன்றாக வேகவைத்துப் பாலில் கலந்து காலை, மாலை என இரு வேளையும் குடித்து வந்தால் உடம்பில் கெட்ட கொழுப்பு அடைப்பு குறையும்.

காலில் இரத்த ஓட்ட அடைப்புக்கு சிகிச்சையாக வெண்தாமரை இதழ், மருதம்பட்டை இதழ், சீந்தில், பூண்டு ஆகியவற்றைச் சூரணமாக்கி சாப்பிட்டால், அந்த அடைப்பு வெளியேறும்.

கொத்தமல்லி கஷாயம் வைத்துக் கொடுக்க நல்ல பலன் கிடைக்கும்.

மகா மஞ்ஞிஷ்டாதி கஷாயம் அல்லது மஞ்சட்டி, மரமஞ்சள், வேப்பம் பட்டை, சீந்தில் கஷாயம் வைத்துக் கொடுத்தாலும் அடைப்புகள் மாறும்.

திரிபலா சூரணம் 10 கிராம்வரை வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வரலாம்.

ஏலாதி, மகா ஏலாதி போன்றவையும் இதற்குச் சிறந்தவை. நவீன மருத்துவத்தில் ஆஸ்பிரின் போன்ற மருந்துகளைக் கொடுப்பார்கள்.

பொதுவாக, நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள், கெட்ட கொழுப்பு அடைப்பை உடலில் சேரவிடாமல் தடுக்கும். இதற்குச் சிறந்த உதாரணமாக ஆப்பிள் பழத்தைக் குறிப்பிடலாம். வாழைத்தண்டு, கீரை வகைகளைக் கூட்டு வைத்துச் சாப்பிடலாம்.

வாழைத்தண்டு சாற்றில் கருமிளகை 48 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு காய வைத்துப் பொடிக்கவும். உணவில் மிளகுக்குப் பதிலாக இந்தப் பொடியை பயன்படுத்தவும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்துவிடும்.

கொள்ளு வேகவைத்து, அரைத்து வடிகட்டி, சிறிது இஞ்சி, பூண்டு, சீரகம் சேர்த்துத் தாளித்து ரசமாகக் குடிக்கலாம். சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.
கறிவேப்பிலையுடன் சிறிது உளுந்து, புளி, உப்பு சேர்த்து துவையல் செய்து உணவுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் கொடம்புளி என்னும் புளியை வழக்கமாகப் பயன்படுத்தும் புளிக்கு பதிலாகப் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

PREV
click me!

Recommended Stories

Push-Ups : இந்த '1' உடற்பயிற்சியை தினமும் காலைல பண்ணாலே 'உடலில்' பல மாற்றங்கள் வரும்
Winter Hair Care : குளிர்காலத்துல ஒரு முடி கொட்டாம அடர்த்தியாக வளரனுமா? அப்ப இந்த எண்ணெய்ல ஒன்னு தேய்ங்க!