குறட்டை பிரச்னைக்கு தீர்வு வழங்கும் நூதன முறை..!!

By Dinesh TG  |  First Published Dec 8, 2022, 11:25 AM IST

தூக்கத்தின் போது குறட்டை விடுவது மிகவும் தொந்தரவு தரும். இதனால் குறட்டை விடுபவர் மட்டுமில்லாமல், அவருக்கு அருகில் படுத்திருக்கும் மற்றவருக்கும் சிரமம் ஏற்படும். இரவு முழுவதும் குறட்டை விட்டு உங்கள் அண்டை வீட்டாரை பயமுறுத்தினால் இதை முயற்சித்து பார்க்கலாம்.
 


தூக்கம் மிகவும் முக்கியமானது. நன்றாக தூங்குவது என்பது ஆரோக்கியத்திற்கு அத்தியாவசமானது. எல்லோரும் ஒவ்வொரு இரவும் நிம்மதியாக தூங்க வேண்டும் என்று தான் விரும்புகின்றனர். ஆனால் ஒருசிலர் தவறான வாழ்க்கை முறை, உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள், முறையற்ற உணவுப் பழக்கங்கள் போன்றவற்றால் நிம்மதியான தூக்கம் இழந்து தவிக்கின்றனர். இதனால் தூக்கமின்மை அல்லது குறட்டை போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஆரம்பத்தில் மக்கள் அவற்றை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் தூக்கமின்மை மற்றும் குறட்டை பிரச்சனைகள் நீண்ட காலத்திற்கு கடுமையான மன மற்றும் உடல் உபாதைகளுக்கு வழிவகுப்பதை அடுத்து, அவற்றின் மீது மக்கள் கவனங்கொள்ள ஆரம்பித்துள்ளனர். இதற்கு என்று பல்வேறு வீட்டு மருத்துவ முறைகள் உள்ளன. அந்த வரிசையில் புதியதாக வந்துள்ள ஒரு நடைமுறை குறித்து தெரிந்துகொள்வோம்.

புதிய முறை

Latest Videos

undefined

குறட்டையை கட்டுப்படுத்தவும், குறட்டையின் சத்தத்தை குறைக்கவும் பல்வேறு நடைமுறைகள் வழக்கத்தில் உள்ளன. அதில் புதியதாக வந்துள்ள முறை தான் ‘மவுத் டேப்பிங்’. இதை ஸ்லீப் ஃபவுண்டேஷன் என்கிற அமைப்பு கண்டுப்பிடித்துள்ளது. இரவில் படுக்கும் முன் வாயை ஒரு டேப்பால் ஒட்டிவிட வேண்டும். வாயில் தட்டும்போது மூக்கு வழியாக சுவாசிக்கிறோம். வாய் முழுவதுமாக மூடியிருப்பதால், அதிலிருந்து காற்று வராது. வாய் வழியாக சுவாசிப்பவர்களுக்கு தூக்கமின்மை ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் தான் குறட்டை வருகிறது.

பயன்கள்

வாயில் டேப்பிங் செய்வதால் ஏற்படும் பாதிப்பு குறித்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதற்காக நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 50 பேர் வாயில் டேப் ஒட்டப்பட்டு தூங்கவைக்கப்பட்டன. அதில் 36 பேர், மொத்தம் 28 இரவுகள் வாயில் டேப் ஒட்டிக்கொண்டு படுத்தனர். இதன்மூலம் கணிசமான அளவில் அவர்களுக்கு நன்மை ஏற்பட்டுள்ளது. எனினும், இந்த முறை தொடர்பாக தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆய்வு அறிக்கை

இரவு முழுவதும் குறட்டை விடுபவர்கள் இந்த வாயில் டேப் ஒட்டும் முறையை முயற்சிக்கலாம். குறட்டைக்கு சிகிச்சையளிப்பதற்கு வாயில் டேப்பிங் செய்வது நன்மையை தரும். ஆய்வில் பங்கேற்றவர்கள் வாயில் டேப் ஒட்டப்பட்டதால் மூக்கு வழியாக சுவாசித்தார்கள். அதனால் அவரது குறட்டையில் நிறைய மாற்றம் ஏற்பட்டு, சுவாசத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதாக ஆய்வு அறிக்கை கூறுகிறது.

இந்த குறிப்பிட்ட வயதில் முட்டை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு கிடைக்கும் அற்புதம்..!!

நன்மைகள்

தற்போதைய ஆய்வின் படி, வாய் தட்டுவதன் மூலம் தூக்கமின்மை பிரச்சனையை குறைக்கலாம். மேலும் வாய் வறண்டு போவதும் நடப்பது கிடையாது. இதனால் ஈறு நோய் மற்றும் வாய் துர்நாற்றத்திற்கும் வாய்ப்பில்லை. வாயில் டேப்பிங் செய்வதன் மூலம் அறிவாற்றல் திறன் மேம்படும் என்றும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இழப்பு

டேப்பிங் செய்யும் போது முகத்தில் டேப்பைப் பயன்படுத்துகிறோம். இந்த டேப்பை அகற்றினால் வலி ஏற்படும். மேலும், பலருக்கு மூக்கின் வழியாக நீண்ட நேரம் சுவாசிப்பது கடினம். இதனால் தூக்கத்தில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். நான்கைந்து நாட்களுக்குப் பிறகு அது பழக்கமாகிவிடும். அதற்கு பிறகு தூக்கத்தில் எந்த பிரச்னையும் இருக்காது. ஒருவேளை இந்த முறையால் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், வாயில் டேப் ஒட்டி தூங்க வேண்டாம்.

click me!