Copper Water: இந்த பாத்திரத்தில் தண்ணீரை வைத்து குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

By Dinesh TGFirst Published Dec 8, 2022, 11:24 AM IST
Highlights

தாமிரம் எனும் செம்பு பாத்திரத்தில் வைக்கப்பட்ட தண்ணீர் குடித்தால் உடல் நலத்திற்கு மிகவும் நன்மை கிடைக்கிறது. தண்ணீரை சுத்தப்படுத்தும் ஆற்றல் தாமிரத்திற்கு உள்ளது. தாமிரப் பாத்திரத்தில் வைக்கப்பட்ட தண்ணீருக்கு வாதம் மற்றும் பித்தத்தை சமநிலைப்படுத்துகின்ற தன்மை உண்டு. ஆனால் இந்த தண்ணீரை குடிப்பதற்கு முன்பாக சில விஷயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் அது ஆரோக்கியத்திற்கு தீங்கை விளைவித்து விடும்.
 

சுத்தப்படுத்தாத பாத்திரங்கள்

செம்பு பாத்திரங்களை கழுவாமல் அப்படியே பயன்படுத்தி வந்தால், அதில் பச்சை நிற பாசி படர்ந்து விடும். செம்பு பாத்திரம் தண்ணீர் மற்றும் காற்றுடன் கலந்து, காப்பர் கார்பனேட் (CuCO3) எனும் இரசாயனத்தை உருவாக்குகிறது. ஆகையால் தான் செம்பு பாத்திரத்தில் பச்சை நிறத்தில் படலம் உருவாகிறது. இந்த இரசாயனம் கெமிக்கல் நீருடன் கலந்து, நம்முடைய வயிற்றுக்குள் சென்றால் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

தரையில் வைக்க கூடாது

பலரும் உறங்குவதற்கு முன்னர், ஒரு செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, தரையில் வைத்துவிட்டு அதிகாலையில் எழுந்ததும், அந்த தண்ணீரை குடிப்பார்கள். ஆனால் அவ்வாறு செய்வதால் உடலுக்கு தீங்கு ஏற்படும். தாமிர நீரை சாதாரண தரையில் வைக்க கூடாது. இதனை ஒரு மர மேசையில் வைக்க வேண்டும். இல்லையென்றால், உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்க கூடும்.

அசிடிட்டி நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும்

செப்பு நீர் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும் என்றாலும், அமிலத் தன்மை உள்ள நோயாளிகள் இந்த நீரை அருந்துவதை தவிர்க்க வேண்டும். இந்நீரின் தாக்கம் அசிடிட்டி நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

Novel Fruit: நாவல் பழத்தை இந்த உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிடுவது அவ்வளவு மோசமானதா?

வெறும் வயிற்றில் குடிப்பது சிறப்பு

காலையில் வெறும் வயிற்றில் செம்பு நீரை குடிக்க வேண்டும். சாப்பிட்ட பின்னர், இந்நீரை குடிப்பது தீங்கு விளைவிக்க கூடும். வெறும் வயிற்றில் செம்புத் தண்ணீரை குடித்தால், செரிமானத்திற்கு நன்மையைத் தரும். உணவுக்குப் பின்னர் அதனை குடித்தால் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும்.

நீரை சேமித்து வைக்கும் நேரம்

செம்பு நீரை குடிப்பதன் மூலமாக ஆரோக்கியம் மேம்பட வேண்டுமெனில், அந்தத் தண்ணீரை ஒரு செம்புப் பாத்திரத்தில் குறைந்தபட்சம் 8 மணிநேரமாவது வைத்திருக்க வேண்டும். செம்பு பாத்திரத்தில் 48 மணி நேரத்திற்கு தண்ணீரை சேமித்து வைக்கலாம் என்றாலும், பாத்திரத்தை அடிக்கடி முறையாக சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.
 

click me!