
Side Effects of Sleeping Right After Taking a Bath : சாப்பிட உடனே தூக்கம் வருவது சகஜம். அதுவும் குறிப்பாக, மதியம் உணவுக்கு பிறகு கண் சொக்கும். சிறிது நேரமாவது தூங்கத் தோன்றும். காரணம் உணவு வயிற்றில் சென்றவுடன் தானாகவே தூக்கம் வந்துவிடும். சாப்பிட்ட பிறகு தூங்குவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று நாம் அனைவரும் அறிந்ததே.
சாப்பிட்டு பிறகு மட்டுமல்ல, குளித்த பிறகும் பலருக்கும் தூக்கம் வரும். ஆனால் குளித்த உடனே தூங்கினால் உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அது என்னென்ன என்பதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
குளித்த உடனே தூங்கினால் ஏற்படும் விளைவுகள்:
1. தலைவலி:
குளித்த உடனே தூங்கினால் அதிகப்படியான தலைவலியை ஏற்படுத்தும். அதுவும் குறிப்பாக தலைக்கு குளிக்கும்போது இந்த பிரச்சனை மிகவும் மோசமாக இருக்கும். ஏனெனில் தலைமுடி ஈரமாக இருக்கும் போது உடல் வெப்பநிலை குறையையும். இதனால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, மூளையில் அழுத்தத்தை ஏற்படுத்தும் இதன் விளைவாக தலைவலி ஏற்படும்.
2. சளி இருமல் மற்றும் காய்ச்சல்:
ஈரமான தலையுடன் தூங்கும் போது சளி இருமல் மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தும். குறிப்பாக குளிர்ந்த நீரில் தலைக்கு குளிப்பது இந்த உடல்நல பிரச்சனைகளின் அபாயத்தை மேலும் அதிகரிக்கும்.
3. முடி உதிர்தல்:
ஈரமான தலைமுடியுடன் தூங்கினால் முடியும் வேர்கள் பலவீனமடையும். இதனால் முடி எளிதில் உடைந்துவிடும். மேலும் முடியில் இருக்கும் இயற்கையான பளபளப்பு இழக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ஈரப்பதம் காரணமாக உச்சந்தலையில் பாக்டீரியாக்கள் வளரும்.
4. தசை மற்றும் மூட்டு வலி:
குளித்த உடனே தூங்கினால் உடல் வெப்பநிலையானது குறையக்கூடும். இதன் விளைவாக தசைகள் மற்றும் மூட்டுகளில் வலியை ஏற்படுத்தும். இந்த வலியானது இறுதியில் நாள்பட்ட மூட்டு வலிக்கு வழிவகுக்கும்.
5. செரிமான பிரச்சனைகள்:
குளித்துவிட்டு ஈரத்தலையுடன் தூங்குவது உடலின் வெப்ப சமநிலையை பாதிக்கும். ரத்த ஓட்டத்தை குறைக்கும். செரிமான செயல்முறை மெதுவாக்கும். மேலும் வயிற்று பிரச்சனைகள், அஜீரணத்திற்கு வலிவகுக்கும்.
6. முகப்பரு மற்றும் சரும பிரச்சனைகள்:
ஈரமான தலையுடன் தலையணையில் தூங்கினால் தலையணையில் பாக்கிய வளர்ச்சியை அதிகரிக்கும். இதனால் முகப்பருக்கள், சரும ஒவ்வாமை மற்றும் பிற தோல் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
குறிப்பு:
இந்த பிரச்சனைகள் வராமல் இருக்க குளித்த தூங்குவதை தவிர்க்க வேண்டும். குளித்த பிறகு தலைமுடியை நன்கு காய வைக்கவும். குறைந்தது ஒன்று முதல் இரண்டு மணி நேரம் காய வைக்க வேண்டும். அதன் பிறகு தான் தூங்க வேண்டும். தலைமுடி நன்றாக காய்ந்தால் உடல் வெப்பநிலை சீராக இருக்கும். இதனால் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது. அதுபோல எப்போதும் நிறைய தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் ஆரோக்கியத்தை பராமரிக்க சத்தான உணவு சாப்பிடுங்கள்.