சிறுவயதிலேயே தூரப்பார்வையா? காரணம் இதுதான்.. பெற்றோர்களே அலர்ட்!

Published : Jun 03, 2025, 12:42 PM IST
eyes care tips in hindi

சுருக்கம்

பிஞ்சு பருவத்தில் பார்வை குறைபாடு அதிகமாக ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதை தடுக்கும் முறை குறித்து இங்கு பார்க்கலாம்.

Myopia in Children: Causes, Symptoms, and Prevention : பார்வை குறைபாடு என்பது முதுமை அடையும் போது அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இந்த குறைபாடு பிஞ்சு பருவத்திலேயே அதிகமாக உள்ளன. இதற்கான காரணங்கள் மற்றும் அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நவீனமயமான யுகம்:

பிஞ்சு வயதிலேயே குழந்தைகளின் பார்வை மோசமடைவதற்கு முக்கிய காரணம் டிஜிட்டல் சாதனங்கள் தான். ஆம் டிவி, மொபைல், லேப்டாப் போன்ற டிஜிட்டல் சாதனங்களை அதிகமாக பயன்படுத்துவதால் தான் குழந்தைகளின் பார்வையில் குறைபாட்டை ஏற்படுத்திகின்றன.

குழந்தைகள் டிஜிட்டல் சாதனங்களில் அடிமையாக இருப்பதால் வெளியே சென்று விளையாட விரும்புவதில்லை. இதனால் இயற்கையாக கிடைக்கும் சூரிய ஒளியின் நன்மைகளும் கிடைக்காமல் போகின்றன. இதன் விளைவாக தூரப்பார்வை (myopia) ஆரம்பமாகின்றன. மேலும் உடல் செயல்பாடுகளும் குறையும்போது கண் தசை வளர்ச்சியானது நேரடியாக பாதிக்கப்படுகிறது. இதுதவிர வைட்டமின் ஏ, ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், லூட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகும் போது கண் ஆரோக்கியம் பாதிப்படைக்கின்றன.

மயோபியா (myopia) என்றால் என்ன?

மயோபியா என்பது தொலைவில் இருக்கும் பொருட்கள் மங்கலாக தெரியும். இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்ட குழந்தையை ஆரம்பத்திலேயே சரியாக கவனிக்கவில்லை என்றால், பிறகு இளம் பருவத்தில் கண் பார்வை மோசமாக பாதிக்கப்படும்.

மயோபியா (myopia) அறிகுறிகள்:

- புக் படிக்கும் போது அதிகப்படியான தலைவலி

- எழுதும் போது படிக்கும் போது கூர்ந்து பார்ப்பது

- தூரத்தில் இருக்கும் பொருட்களை கண் சுருக்கி பார்ப்பது

- டிவி, மொபைல் போன் போன்ற கேட்ஜெட் சாதனங்களை மிக அருகில் அமர்ந்து பார்ப்பது

இது போன்ற அறிகுறிகள் ஏதேனும் உங்கள் குழந்தையிடம் காணப்பட்டால் உடனே அது மயோபியாவா என்று கண்டறிய கண் மருத்துவரிடம் குழந்தையை அழைத்துச் செல்லுங்கள்.

எப்படி தடுப்பது?

  • குழந்தைக்கு மயோபியா பிரச்சனை வராமல் தடுக்க 20-20-20 என்ற விதியை பின்பற்ற வேண்டும். அதாவது குழந்தை டிஜிட்டல் சாதனைகளை பயன்படுத்தும் போது ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒருமுறை 20 அடி தூரத்தில் உள்ள ஏதாவது ஒன்றை 20 நிமிடங்கள் பார்க்க வேண்டும் இதனால் கண்ணில் அழுத்தம் ஏற்படாது.
  • அதுமட்டுமின்றி கேரட், கீரை, மீன் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுங்கள். அவை குழந்தைகளின் பார்வையை தெளிவாகும்.

பெற்றோருக்கு மயோபியா இருந்தால் குழந்தைக்கு வருமா?

பெற்றோருக்கு மயோபியா கண்டிப்பாக குழந்தைகளுக்கும் வர வாய்ப்பு அதிகம் உள்ளன. ஆகையால் குழந்தைகளுக்கு வழக்கமான கண் பரிசோதனை, மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட கண் மருந்து சொட்டுக்கள் போன்றவை பரம்பரை ரீதியாக வரும் இந்த பிரச்சனையை நிர்வகிக்கும். இந்த அறிகுறிகளை குழந்தையிடம் கண்டால் அலட்சியம் செய்யாமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
Skincare Routine : அழகின் உச்சத்தைத் தொட இந்த '6' பழக்கங்கள் போதும்; உங்களை பாக்குறவங்க அசந்துடுவாங்க!!