
தினசரி உடற்பயிற்சி செய்வது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் அளவுக்கு மிஞ்சி எந்தவொரு செயலையும் செய்வது அது நன்மைக்கு பதிலாக தீமையை தான் விளைவிக்கும் என்பது போல, நாம் உடற்பயிற்சி செய்வது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கினாலும், அதை அளவுக்கு அதிகமாக செய்தால் உடலில் பல மோசமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
1. அதிகப்படியான உடற்பயிற்சி (overtraining)
இது நீண்ட காலமாக அதிகளவு செய்யும் உடற்பயிற்சியாகும். இதன் விளைவாக அதிகப்படியான சோர்வு, தசை வலி, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
2. அதீத உடற்பயிற்சி (over-exercising)
குறுகிய காலத்தில் அதிதீவிரமாக செய்யும் உடற்பயிற்சி ஆகும். இதன் விளைவாக தசை சேதம், இதய நோய் போன்ற ஆபத்தான பிரச்சனைகள் ஏற்படும்.
- அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்தால் இதயம் மோசமாக பாதிக்கப்படும். அதாவது ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, இதயதசை வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
- நீண்ட காலமான அதிகப்படியான உடற்பயிற்சி செய்தல் தசைகளை காயப்படுத்துவது மட்டுமல்லாமல், வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும். மேலும் எலும்புகளில் அழுத்தத்தை அதிகரித்து எலும்பு முறிவை ஏற்படுத்தும்.
- அதிகப்படியான உடற்பயிற்சி செய்தல் ஹார்மோன் சுரப்பை பாதிக்கும், மாதவிடாய் பிரச்சினை கருத்தரிப்பதில் சிக்கல், பாலியல் விஷயத்தில் ஆர்வம் குறைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
- தொடர்ச்சியாக அதிகப்படியாக உடற்பயிற்சி செய்வது மன அழுத்தம், மனசோர்வை ஏற்படுத்தும். மேலும் தூக்கத்தையும் பாதிக்கும்.
- உடற்பயிற்சி செய்வது நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். இதனால் தொற்று நோய்கள் தாக்கும் வாய்ப்பை அதிகரிக்கும்.
- அதிகப்படியான உடற்பயிற்சி உணவுக் குழாயில் புண் மற்றும் அலர்ஜியை ஏற்படுத்தும்.
- தொடர்ச்சியான அதிகப்படியான உடற்பயிற்சி செய்தல் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி தலைசுற்றல் போன்றவற்றை உண்டாக்கும்.
அதிகப்படியான உடற்பயிற்சி செய்தல் மேலே சொன்ன பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே இனி உடற்பயிற்சி செய்யும் போது கவனமாக இருங்கள். அதுபோல உங்களது உடல் திறனுக்கு ஏற்றவாறு உடற்பயிற்சி செய்யவும்.