கடுமையான முதுகுவலியா? இந்த நோயாக கூட இருக்கலாம்... 

First Published Mar 28, 2018, 1:10 PM IST
Highlights
Severe back pain This may be the same ...


பெரும்பாலும் தசைப்பிடிப்புகள் மற்றும் அதிக அழுத்தம் காரணமாக தாங்கமுடியாத முதுகு வலி பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதுவே அந்த முதுகு வலி நீண்ட நாட்களாக இருந்தால், ஏதோ நோயின் அறிகுறி என்பது உங்களுக்கு தெரியுமா?

முதுகு வலி எந்த நோயின் அறிகுறிகள்?

** இரவில் தூங்கும் போது, தூங்கும் நிலையை மாற்றும் தருணத்தில் முதுகு பகுதியில் உள்ள வலியை உணர்ந்தால், அது முதுகு பகுதியில் கட்டி இருப்பதற்கான ஓரு அறிகுறியாக இருக்கலாம்.

** முதுகுவலி ஏற்படும் போது, அது மேல் அல்லது கீழ் முதுகுப் பகுதியில் உள்ள குறிப்பிட்ட தசை அல்லது எலும்பு இணைப்புகளுடன் தொடர்புடையது போன்று தெரியாமல் இருந்தால், அது மாரடைப்பிற்கான அறிகுறியாகும்.

** காலையில் எழுந்ததும் முதுகுப் பகுதியில் லேசாக வலியை உணர்வது சாதாரணம். ஆனால் அந்த வலி 30 நிமிடங்களுக்கு அதிகமாக நீடித்தால், அழற்சி தொடர்பான கீல்வாதமாக இருக்கலாம்.

** சிலருக்கு ஏதேனும் ஒரு விபத்து ஏற்பட்ட பின், முதுகு பகுதியில் கடுமையான வலியை உணர்ந்தால், அது முதுகுத்தண்டு முறிவு அல்லது இதர பிரச்சனைகளின் அறிகுறியாகும்.

** சில நேரங்களில் முதுகின் நரம்பு வேர்களில் அழுத்தம் அதிகமாக கொடுக்கப்பதால், நீர்ப்பை அல்லது குடலியக்கம் கட்டுப்பாடின்றி இயங்கும். இதனால் தாங்கமுடியாத முதுகுவலி பிரச்சனைகள் ஏற்படும்.

click me!