மூளைப் புற்றுநோய் இருப்பதை உறுதி செய்யும் ஏழு அறிகுறிகள்...

Asianet News Tamil  
Published : Feb 02, 2017, 01:46 PM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
மூளைப் புற்றுநோய் இருப்பதை உறுதி செய்யும்  ஏழு அறிகுறிகள்...

சுருக்கம்

1. தாறுமாறான உடல் இயக்கம்

தடுமாற்றம் மற்றும் கீழே விழுவது, பூட்டுக்களை திறக்க கஷ்டப்படுவது, பொருட்களை தவறவிடுவது, போன்ற விஷயங்களை அடிக்கடி சந்திப்பது மூளைக் கழலை நோயின் அறிகுறிகளாக இருக்கலாம். ஏனெனில் இந்த அறிகுறிகள் உங்களுடைய நரம்புகள் பலவீனமடைவதை குறிக்கலாம்.

2. உணர்வின்மை

மூளைக் கழலை அதிர்ச்சி நோயின் மற்றொரு முக்கியமான அறிகுறி இதுவாகும். கைகள் மற்றும் கால்களில் உணர்ச்சி இல்லாமல் போகலாம்.

மேலும் உடல் முழுவதும் ஒரு கூச்ச உணர்வு தோன்றலாம். இவை அனைத்தும் குறைந்த இரத்த அழுத்தத்தின் காரணமாக ஏற்படும்.

3. ஞாபக மறதி  

சில குறிப்பிட்ட நிகழ்வுகள் அல்லது வார்த்தைகள், முதலியவற்றை நீங்கள் மறந்து விடலாம். மேழும் உங்களுக்கு குழப்பம், சிரமம் ஏற்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.

ஏனெனில் இவை அனைத்தும் மூளைக் கழலை நோயின் அடையாளமாக இருக்க முடியும்.

4. குமட்டல்

எந்த ஒரு வெளிப்படையான காரணம் இல்லாமல் குமட்டலை அனுபவிப்பது மூளைக் கழலை நோயின் மிக நுட்பமான அறிகுறிகளில் ஒன்றாக இருக்க முடியும். இந்த அறிகுறியை பெரும்பாலான மக்கள் அலட்சியம் செய்கின்றனர்.

5. மங்களான பார்வை

உங்களுடைய கண்களை சோதனை செய்யும் பொழுது சோதனை முடிவுகள் எந்த ஒரு பிரச்சனைகளைகும் குறிப்பிடாமல் இருக்கலாம்.

எனினும் உங்களுக்கு மங்களான பார்வை போன்ற கண் சார்ந்த பிரச்சனைகள் இருந்தால் அது மூளைக் கழலை நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

6. பேசுவதில் சிரமம்

மூளைக் கழலை நோய் உள்ள சிலருக்கு பேசுவதில் சிரமம் ஏற்படுகின்றது. அவர்கள் தங்களுடைய எண்ணங்களை வெளிப்படுத்துவதில் சிரமத்தை சந்திக்கின்றார்கள்.

இவை அனைத்தும் அவர்களுடைய புலனுர்வு செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்களிலான ஏற்படுகின்றது.

7. முக வலி

நீங்கள் உங்களுடைய முகத்த்தின் பல்வேறு பகுதிகளில் கூர்மையான வலியை அனுபவிக்கின்றீர்கள் எனில் அது நிச்சயமாக மூளைக் கழலை நோயின் மற்றொரு அடையாளமாக இருக்க முடியும்.

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake