
மனித உடலுக்கு சக்தியைக் கொடுப்பது வைட்டமின்கள்தான். உணவின் மூலமே இந்த வைட்டமின்கள் அதிகளவு உடலுக்குக் கிடைக்கிறது.
வைட்டமின்கள் மொத்தம் 13 உள்ளன. இவற்றில் கொழுப்பில் கரையும் வைட்டமின்கள், நீரில்கரையும் வைட்டமின்கள் என இரு வகைகள் உள்ளன.
கொழுப்பில் கரையும் வைட்டமின்கள்
உடலின் தேவைக்கு ஏற்ப உபயோகப்படுத்தப்பட்டு, மீதமுள்ளவை கொழுப்பு பொருட்களாக கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது.
நீரில் கரையும் வைட்டமின்கள்
உடலின்தேவைக்கு ஏற்ப எடுத்துக் கொள்ளப்பட்டு மீதி கழிவுகள் மூலம் வெளியேற்றப்படுகிறது.
கொழுப்பில் கரையும் வைட்டமின்கள்
1. வைட்டமின் ஏ
2. வைட்டமின் டி
3. வைட்டமின் இ
4. வைட்டமின் கே
வைட்டமின் E உடலில் கலக்கும் முறை
வைட்டமின் E உள்ள உணவுப் பொருட்களை உண்ணும் போது, அவை சிறுகுடலில் உள்ள உறிஞ்சிகள் மூலம் உறிஞ்சப்பட்டு அடிபோஸ் திசுக்களில் சேகரிக்கப்படுகிறது. பின் அவை தேவைக்கேற்ப உபயோகிக்கப்படுகிறது.
வைட்டமின் E அதிகமுள்ள உணவுப் பொருட்கள்
1· பருத்தி விதை எண்ணெய்
2· சோள எண்ணெய்
3· சூரியகாந்தி எண்ணெய்
4· சோயாபீன்ஸ்
5· முட்டைகோஸ்
6· சிறுகீரை
7· ஆப்பிள் விதைகள்
8· பட்டாணி கடலை
9· ஈஸ்ட்
10. பால்: ஜீரணமானவுடன் புரோட்டீன் எளிதில் கிடைத்துவிடும்.
11. சோயா: உடல் வளர்ச்சிக்கும் தசைச் செல்கள் பெருகவும் முழுமையான அளவு புரோட்டீன் இதில்தான் உள்ளது.
12. தானியங்கள்: எளிதில் கிடைக்கக் கூடிய உயர் ரக புரோட்டீன் இவற்றில் உள்ளன.
13. காளான்: அமினோ அமிலம் அதிகம் உள்ளது. உடலுக்கு மிக நல்ல புரோட்டீனைத் தரக் கூடியது. (அலர்ஜி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.)
14. நிலக்கடலை: நல்ல புரோட்டீன், உள்ளது. ஆனால் கொழுப்பு அதிகம் உள்ளது. அளவாகப் பயன்படுத்தல் வேண்டும்.
15. மீன், பருப்பு வகைகளைப் பொரித்து உண்பதை விட வேகவைத்து உண்பதே மிகச்சிறந்தது. வைட்டமின் E சத்து இவற்றில் அதிகம் உள்ளது. சமைத்தவுடன் சாப்பிடுவது சாலச்சிறந்தது.
வைட்டமின் E-ன் உபயோகத்தால் விளையும் நன்மைகள்
1· இரவில் கண்டதசையில் எற்படும் தசைப்பிடிப்பு (Nocturnal Muscle cramps) - இது வைட்டமின் E சத்துள்ள உணவுகளை உட்கொள்வதால் குறையும்.
2· ரத்த நாளத்தில் கொழுப்பினால் ஏற்படும் அடைப்புகளை கரைக்கும் தன்மை (Atherosclerosis) வைட்டமின் E க்கு உண்டு.
3· மார்பகத்தில் ஏற்படும் நார்த்திசுக் கட்டிகளை (Fibrocystic breast disease) கரைக்கும் தன்மை வைட்டமின் E க்கு உண்டு.
வைட்டமின் E குறைவினால் உண்டாகும் நோய்கள்:
1.. தசைவாதம் (Muscular dystrophy)
இன்றைய உலகில் பெரும்பாலான குழந்தைகள் தசைவாதம் என்னும் நோயால் அதிகம்பாதிக்கப்பட்டுள்ளனர். வைட்டமின் E சத்து குறைவதால் தசைகளில் உள்ளகொழுப்புச் சத்து குறைந்து போகிறது. இதனால் தசைவாதம் உண்டாகிறது. இந்நோய் தீருவது மிகவும் அரிதாகும்.
2.. இரத்தச் சோகை (Haemolytic anaemia)
வைட்டமின் E சத்து குறைவதால் இரத்த சிவப்பணுக்கள் அழிந்துபோகின்றன. இதனால் இரத்தச் சோகை உருவாகிறது. இரத்தச் சோகையைப் போக்க வைட்டமின் E சத்து அதிகமுள்ள பொருட்களை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
3.. கல்லீரல் தாபிதம் (Dietary Hepatic necrosis)
கல்லீரலில் உள்ள திசுக்கள் அழிவதால் இந்நோய் வரக்கூடும். எனவே இவ்வகைநோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள வைட்டமின் E கலந்த உணவை உட்கொள்ளவேண்டும்.
வைட்டமின் E சத்தானது மலட்டுத்தன்மையை குறைத்து மகப்பேறு ஏற்படச் செய்யும். இந்த சத்து குறையுமானால் மலட்டுத்தன்மை உண்டாகும்.
அண்மையில் அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்த விஞ்ஞானிகள் மூளையில் உண்டாகும் திடீர் அதிர்வை தடுக்கவும் நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கவும் வைட்டமின் E மிகவும் தேவையென கண்டறிந்துள்ளனர்.