Sesame Seed Milk : எள்ளுப் பால் பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா? இல்லையென்றால் அதை தயாரிக்கும் முறை மற்றும் அதன் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
நீங்கள் பசும்பால், சோயாபால், பாதாம் பால் போன்றவற்றை தான் கேள்விப்பட்டிருப்பீர்கள் மற்றும் அவற்றை குடித்தும் இருப்பீர்கள். ஆனால், எள்ளு பால் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்களா? பொதுவாக எள்ளிருந்து எண்ணெய், லட்டு, ஸ்வீட் போன்றவற்றை மட்டுமே தெரிந்துவைத்திருக்கிறோம். ஆனால் எள்விதைகளை தண்ணீரில் அரைத்து எள்பால் தயாரிக்கலாம். இயல் விதையிலிருந்து பெறப்படும் பாலில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. சொல்ல போனால் இதில் சாதாரண பாலை விட அதிக அளவு புரதச்சத்து உள்ளது. கால்சியம் இரும்புச்சத்து நார்ச்சத்து தாமிரம் புரதம் மற்றும் பல வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. எனவே இப்போது இயல்பால் தயாரிக்கும் முறை மற்றும் அது குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: கர்ப்பிணிகள் எள் சாப்பிட்டால் என்ன நடக்கும்? உங்களுக்கும் இந்த சந்தேகம் இருக்கிறதா? வாங்க தெரிஞ்சிகலாம்!
எள் பால் தயாரிக்கும் முறை:
தேவையான பொருட்கள்:
கருப்பு (அ) வெள்ளை எள் விதைகள் - 1 கப்
தண்ணீர் - 1/2 கப்
வெண்ணிலா பவுடர் - 3 ஸ்பூன்
வெல்லம் - 1 ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பெரிய கிண்ணத்தில் எள்ளை போட்டு நன்றாக கழுவி அதில் தண்ணீர் ஊற்றி சுமார் 2-3 மணி நேரம் நன்றாக ஊற வைக்க வேண்டும். எள்ளு நன்றாக உப்பி வந்ததும் அதை மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பிறகு அதில் பாலை மட்டும் தனியாக வடிகட்டி எடுக்கவும். அடுத்ததாக அதில் வெண்ணிலா பவுடர் மற்றும் ஒரு ஸ்பூன் வெல்லம் சேர்த்து நன்றாக கலக்கவும். அவ்வளவுதான் எள்ளு பால் ரெடி!
இதையும் படிங்க: குளிர்காலத்தில் பெண்கள் தினமும் '2' ஸ்பூன் எள் கட்டாயம் சாப்பிடனும்.. ஏன் தெரியுமா?
எள்ளு பால் நன்மைகள்:
எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது:
எழிலிருந்து தயாரிக்கப்படும் பாலில் அதிக அளவு கால்சியம், மெக்னீசியம் உள்ளதால், இவை எலும்புகளை வலுவாக்கும் மற்றும் எலும்பு தொடர்பான பிரச்சனைகளை குறைக்கும்.
எடை இழுப்புக்கு உதவும்:
எள்ளில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது அதுமட்டுமின்றி எடை இழுப்புக்கும் இது ரொம்பவே முக்கியம் எனவே எல் பால் குடித்து வந்தால் செரிமானத்தை செயல்படுத்த உதவும் மற்றும் நீண்ட நேரம் வயிற்று முழுமையாக வைத்திருக்கும். இதனால் சுலபமாக எடையை குறைத்து விடலாம்.
வீக்கத்தை குறைக்கும்:
எள் பாலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கிறது மற்றும் பல நோய்களின் அபாயத்தை குறைக்க உதவுகிறது.
கொலஸ்ட்ரால் அளவை சீராக்கும்:
எல் பாலில் ஆரோக்கியமான கொழுப்புகள் ஏராளமாக உள்ளது. முக்கியமாக இதில் இதயத்தை ஆரோக்கியமாக வைக்க தேவையான கொழுப்புகள் உள்ளன. எனவே எழுப்பால் குடித்து வந்தால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு சீராக வைக்கும்.
சருமத்திற்கு நல்லது:
எள் பாலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளதால், இவை சருமத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றன. முக்கியமாக இது சருமத்தை நீரேற்றமாக வைக்கும் மற்றும் ஈரப்பதத்தை வழங்கும். மேலும் சருமம் தொடர்பான பிரச்சனைகளின் அபாயத்தை குறைக்கும்.
செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்கும்:
செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்க இயல்பால் உதவுகிறது. இதில் அதிக அளவு நர்சத்து உள்ளதால் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்கும். இதனால் மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:
எள் விதையில் துத்தநாகம், தாமிரம், இரும்பு, செலினியம் மற்றும் வைட்டமின் ஈ, வைட்டமின் பி6 உள்ளன. இவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்கும். எனவே எள்ளு பால் குடித்து வந்தால் தொற்று நோய்களை எதிர்த்து போராடலாம்.
சர்க்கரை நோய் கட்டுப்படுத்தும்:
எள் பாலில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாகவும், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதங்கள் ஏராளமாக உள்ளன. எனவே இவை ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டு வைக்க பெரிதும் உதவுகிறது.