லூஸ் மோஷனால கஷ்டபடுறீங்களா? '1' ஸ்பூன் தேனில் தீர்வு இருக்கு!!

Honey For Loose Motions : லூஸ் மோஷனால் நீங்கள் அவதிப்படுகிறீர்கள் என்றால், அதை நிறுத்த தேனை பயன்படுத்துவதற்கான சில வழிகள் இங்கே.

How to Use Honey to Stop Loose Motions in tamil mks

லூஸ் மோஷன் என்பது பலரையும் தொந்தரவு செய்யும் ஒரு பிரச்சனை. இது வயிற்றுப்போக்கு என்றும் அழைக்கப்படுகிறது. குறிப்பாக குழந்தைகள் தான் இதனால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இந்த பிரச்சினையால் வயிறு மற்றும் குடல்களின் செயல்பாடு பாதிக்கப்பட்டு மலமானது மிக மெல்லியதாக அல்லது தண்ணீராக வெளியேறும். பொதுவாக வயிற்றுப்போக்கு 1-3 நாட்களுக்கு பிறகு தானாகவே சரியாக விடும். சில நேரங்களில் இது பல நாட்களுக்கும் நீடிக்கும். ஆனால் அப்படி நீடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ஏனெனில் இதனால் உடலில் நீரிழிவு பிரச்சினை ஏற்படும்.

ஒருவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அது எதுவாக இருந்தாலும் சரி, அது நீண்ட நாள் நீடித்தால் நீங்கள் அதை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.  இதன் காரணமாக குமட்டல், வீக்கம், வயிற்றுப் பிடிப்பு, நீர்ப்போக்கு, காய்ச்சல், வாந்தி, மலத்தில் ரத்தம் போன்ற பிரச்சினைகளை நீங்கள் அனுபவிக்க நேரிடும். வயிற்றுப்போக்கு வந்தாலே பலர் அதற்குரிய மருந்துகள் அல்லது சிகிச்சையை எடுத்துக் கொள்வார்கள். ஆனால் அதற்கு பதிலாக தேன் உங்களுக்கு உதவி தெரியுமா?

Latest Videos

இதையும் படிங்க:  குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் 'மோர்' கொடுக்கலாம்..  'எதை' கொடுக்கவே கூடாது தெரியுமா?

வயிற்றுப்போக்கிற்கு தேன் எவ்வாறு உதவுகிறது?

தேன் ஒரு சிறந்த வீட்டு வைத்தியம் ஆகும். இதில் இருக்கும் பண்புகள் வயிற்றுப்போக்குள் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கின்றன. சொல்லப்போனால் தேன் ஒரு சிறந்த மலமிளக்கியாக செயல்படுகின்றது. 
குடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை இது எதிர்த்து போராடுவதற்கான பண்புகள் தேனில் உள்ளன. தேன் வயிற்றுப்போக்கை சரி செய்வது மட்டுமின்றி,  செரிமான மண்டலத்தில் ஏற்படும் வீக்கம் எரிச்சலில் இருந்து நிவாரணம் அளிக்கவும், அசெளகரியத்தைக் குறைக்கவும் பெரிதும் உதவுகிறது.

அதுபோல தேனில் இருக்கும் இயற்கையான எலக்ட்ரோலைட்டுகள், சர்க்கரை மற்றும் கனிமங்கள் உங்களை நீரேற்றமாக வைக்காவும் உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது. இருப்பினும் அதிகப்படியான தேனை எடுத்துக் கொள்வது உடலில் எதிர்மறையான  விளைவை ஏற்படுத்தும். இப்போது வயிற்றுப்போக்கிற்கு தேனை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

இதையும் படிங்க:  Parenting Tips : குழந்தைக்கு வயிற்றுப்போக்கு உடனே குணமடைய சூப்பரான பாட்டி வைத்தியம் இதோ..!!

லூஸ் மோஷனுக்கு தேனை பயன்படுத்தும் முறை:

லூஸ் மோஷனுக்கு வீட்டு வைத்தியமாக தேன் பயன்படுத்த பல வழிகள் உள்ளன. அவை இங்கே:

1. சூடான நீர் & தேன்:

சூடான நீரில் தேன் கலந்து குடித்தால் லூஸ் மோஷன் சரியாகும். இந்த நீர் சர்க்கரை மற்றும் சில தாதுக்களின் இயற்கையான ஆதாரமாக செயல்படுவதால் உடலை நீரேற்றமாக வைக்கும். இது தவிர செரிமான மண்டலத்தை மேம்படுத்தும். மேலும் திரவங்களை சிறப்பாக உறிஞ்சுவதை உறுதி செய்யும். 

தயாரிக்கும் முறை : ஒரு கிளாஸ் சூடான நீரில் 1-2 ஸ்பூன் தேன் கலந்து ஒரு நாளைக்கு 2-3 குடிக்க வேண்டும்.

2. எலுமிச்சை & தேன்:

தேனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் லூஸ் மோஷனுக்கு மிகவும் பயனுள்ள வீட்டு வைத்தியம் ஆகும். இது உடலை நீரேற்றமாகவும், வயிற்றை ஆற்றவும் நன்றாக வேலை செய்யும். எலுமிச்சை சாறு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் நோய் கிருமி பாக்டீரியாவை எதிர்த்து போராடும்.

தயாரிக்கும் முறை : ஒரு கிளாஸ் சூடான நீரில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து குடிக்க வேண்டும்.

 3. இலவங்கப்பட்டை & தேன்:

தேன் மற்றும் இலவங்கப்பட்டை கலவையானது செரிமானத்திற்கு பல நன்மைகளை வழங்கும். மேலும் இந்த கலவையானது லூஸ் மோஷனுக்கு சிறந்த வீட்டு வைத்தியமாகும். ஆய்வு ஒன்றில் லவங்கப்பட்டையானது குடலில் இருக்கும் நுண்ணுயிர் குழுக்களில் ஏற்படும் மாற்றங்களால் வளர்சிதை மாற்றத்தின் மூலம் வயிற்றுப்போக்கை சரி செய்யும்.

தயாரிக்கும் முறை : ஒரு கப் சூடான நீரில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் இலவங்கப்பட்டை பொடி சேர்த்து நன்கு கலந்து குடிக்கவும்

4. தேன் & இஞ்சி: 

லூஸ் மோஷனுக்கான சிறந்த வீட்டு வைத்தியங்களில் ஒன்று தேன் மற்றும் இஞ்சி கலவையாகும். இஞ்சி வலி மற்றும் மல பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. மேலும் இது வீக்கத்தை குறைத்து செரிமான அசெளகரியத்தை எளிதாக்கும்.

சாப்பிடும் முறை: ஒரு துண்டு இஞ்சியுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிடவும்.

5. வாழைப்பழம் & தேன்:

லூஸ் மோஷனுக்கான வீட்டு வைத்தியங்களில் வாழைப்பழம் மற்றும் தேன் சிறந்த தேர்வாகும். வயிற்றுப்போக்கு மற்றும் பிற செரிமான பிரச்சனைகள் தீர்க்க வாழைப்பழம் பெரிதும் உதவுகிறது. வாழைப்பழத்தில் இருக்கும் பண்புகள் குடலில் உள்ள அதிகப்படியான திரவத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது மற்றும் அவை ஜீரணிக்க எளிதாக இருக்கும்.

சாப்பிடும் முறை: மசித்த வாழைப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிடுங்கள்.

vuukle one pixel image
click me!
vuukle one pixel image