காய்ச்சல் வராமல் தடுக்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
மழைக்காலம் வந்துவிட்டாலே பருவமழை தொடர்பான நோய்களும் வேகமாக பரவத்தொடங்கும். குறிப்பாக அக்டோபர், நவம்பர் மாதங்களில் மழைக்கால நோய் பரவல் அதிகமாக இருக்கும். அந்த வகையில் இந்த ஆண்டும் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. மாறாக அதீத காய்ச்சல், சளி, தொண்டை வலி, வாந்தி போன்றவை இருந்தால் அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இல்லையெனில் உயிருக்கே ஆபத்து ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே காய்ச்சல் வராமல் தடுக்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே இந்த மழைக்காலத்தில் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் ஓரிரு நாட்கள் பார்த்து விட்டு காய்ச்சல் குறையாத நிலையில் உடனடியாக மருத்துவர்களை அணுகுவது நல்லது என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அடிக்கடி கைகளை கழுவுதல், கொதிக்க வைத்து ஆற வைத்த நீரை குடித்தல், சூடான உணவை சாப்பிடுதல், ஹோட்டல் உணவுகளை தவிர்த்து வீட்டிலேயே ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது, கழிவறைகளை சுத்தமாக வைத்துக்கொள்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
காய்ச்சல் பாதிப்பு - எப்படி தற்காத்து கொள்வது?
சீனாவில் நிமோனியா பரவல்.. தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் கண்காணிப்பு தீவிரம்..