மீன் உணவுகளுடன் ஏன் தயிர் சேர்த்து சாப்பிடக்கூடாது? காரணம் இதுதான்..!!

By Dinesh TGFirst Published Sep 15, 2022, 10:26 PM IST
Highlights

பொதுவாகவே அசைவ உணவுகளுடன் தயிர் சேர்த்து சாப்பிடும் பழக்கம் நமது உணவு முறையில் இருந்தது கிடையாது. ஏன் இந்த உணவு முறை தவிர்க்கப்பட்டது? இப்போதும் ஏன் தவிர்க்கப்படுகிறது? இதுதொடர்பான காரணங்களை ஆய்வுகளுடன் அடிப்படையில் பார்க்கலாம்.

பண்டைய காலத்தில் நட்புச்சரக்கு மற்றும் பகைச்சரக்கு என்று இருவேறு விதத்தில் உணவுகளை பிரித்து வைத்திருந்தனர். எந்த உணவுடன், எந்த உணவை இணைத்து சாப்பிடலாம். எந்தெந்த உணவுகளை சேர்த்து சமைக்கலாம், எதை சாப்பிட்டால் எதை எடுத்துக்கொள்ளக்கூடாது என பல்வேறு விதமாக உணவு உண்ணல் பயன்பாட்டை பண்டைய மக்கள் பின்பற்றி வந்தனர். அப்படி தயிரையும் மீன் உணவுகளையும் சேர்த்து சாப்பிடுவதை அவர்கள் தவிரித்துள்ளனர். இதை சங்க இலக்கியங்கள் மற்றும் சித்த மருத்துவக் குறிப்புகளில் பார்க்க முடிகிறது. மீன் என்றில்லை கடல் உணவுகளுடன் தயிர் சேர்த்து சாப்பிடும் வழக்கத்தை அவர்கள் தவிரித்து வந்துள்ளனர். பொதுவாகவே அசைவ உணவுகளுடன் தயிர் சேர்த்து சாப்பிடும் பழக்கம் நமது உணவு முறையில் இருந்தது கிடையாது. ஏன் இந்த உணவு முறை தவிர்க்கப்பட்டது? இப்போதும் ஏன் தவிர்க்கப்படுகிறது? இதுதொடர்பான காரணங்களை ஆய்வுகளுடன் அடிப்படையில் பார்க்கலாம்.

தயிர்

பாலில் இருந்து பெறப்படும் தயிரில் வைட்டமின் பி2 மற்றும் வைட்டமின் பி12, பொட்டாசியம், கால்ஷியம் உள்ள்ட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த சத்துக்குள் குறிப்பிட்ட உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும் போது உபாதைகளை ஏற்படுத்தும். குறிப்பாக அசைவ உணவுகளுடன் சாப்பிடும் போது பாதிப்பு உடனடியாக நிகழக்கூடும். பிரியாணிக்கு வைக்கப்படும் தயிர் வெங்காயமும் கூட தவறுதான் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது. தயிர் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது, வெங்காயம் சூட்டை கிளப்பிவிடக்கூடியது. இதை இரண்டும் சேர்த்து எடுத்துக்கொள்வது உடல்நலனுக்கு கேடாக அமைகிறது. அதேபோன்று மட்டன், சிக்கன் பிரியாணி செய்யும்போது தயிரை சேர்த்து சமைக்கக்கூடாது என்பதும் ஆய்வுகளின் மூலம் தெரியவருகிறது.

தயிருடன் ஏன் மீன் சேர்த்து சாப்பிடக் கூடாது?

தயிரையும் மீனையும் சேர்த்து சாப்பிடக் கூடாது என்று நம்முடைய வீடுகளில் சொல்லப்படுவதுண்டு. ஆனால் தயிர் சோற்றுக்கு தயிரை சேர்த்து சாப்பிடுவது பலரும் விரும்பும் காம்போவாக உள்ளது. அதாவது தயிருக்கு பொதுவாகவே செரிமானத்தை மந்தப்படுத்தும் தன்மை உண்டு. சத்து அதிகமான மீனுடன் தயிரை சேர்த்து சாப்பிடும் போது செரிமானம் மேலும் மந்தமடையும். இதனால் உடலுக்கு எந்தவிதமான சத்தும் மீன் உணவு மூலம் உங்களுக்கு கிடைக்காமல் போய்விடும். இதுதான் தயிரையும் மீனையும் சேர்த்து சாப்பிடாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

தயிருடன் கீரையும் சாப்பிடக்கூடாது

அசைவ உணவுகளில் சத்துக்கள் அதிகம் கிடைக்கின்றன. அவ்வளவு சத்துக்களும் உடலுக்கு கிடைப்பதில் தயிர் சாப்பிடுவதால் தடை செய்யப்பட்டுவிடுகிறது. தயிர் உணவு செரிமானக் கோளாறை ஏற்படுத்தக்கூடும் என்கிற அச்சத்தின் காரணமாகவே மீனுடன் தயிரை சேர்த்து சாப்பிட வேண்டாம் என்று சொல்லப்படுகிறது. கிராமப் பகுதிகளில் தயிரும் கருவாடும் சேர்த்து சாப்பிடும் பழக்கம் இன்றுவரையில் தொடர்கிறது. அதனால் அது நஞ்சாக மாறும் என்பதெல்லாம் கட்டுக்கதை. செரிமானக் கோளாறை தவிர தயிரும் மீனையும் சேர்த்து சாப்பிடுவதில் எந்த பிரச்னையும் இல்லை என்பதே உண்மை.

Health Tips : கொய்யா உடலுக்கு நல்லது தான்- ஆனால்..? நிபுணர்கள் விடுக்கும் எச்சரிக்கை..!!

மாம்பழமும் தயிரும் கூடாது

மாம்பழத்துடன் தயிர் சேர்த்து சாப்பிடுவது நம்முடைய உணவுப் பழக்கத்தில் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. காரைக்கால் அம்மையார் சிவன் பெருமானுக்கு தயிர் சோறும் மாம்பழமும் சேர்த்து விருந்து வைத்தார் என்று இதிகாசங்களில் கூறப்பட்டுள்ளது. வெங்காயமும் தயிரைப் போன்று, மாம்பழமும் தயிரும் எதிர்தன்மை கொண்டதாகும். மாம்பழம் உடலுக்கு சூடு. இதுவும் தயிருடன் சேர்த்து சாப்பிடுவது தவறான செயல். ஏதோவொரு நாளில் சாப்பிட்டால் பெரியளவில் பாதிப்பு இருக்காது. ஆனால் தொடர்ந்து இப்படி சாப்பிட்டுவந்தால், செரிமானப் பிரச்னை ஏற்படக்கூடும்.

உப்பில் சிறந்தது எது?- கல் உப்பா?? இந்துப்பா..??

அதிகம் புரதம் உடம்புக்கு ஆகாது

மீனுடன் முட்டையையும் சேர்த்து சாப்பிடுவதில் பிரச்னை ஏற்படும். இரண்டும் புரதச்சத்து நிறையவே உண்டு. அவை இரண்டையும் ஒரே நேரத்தில் எடுத்துக்கொள்ளக்கூடாது. அதிகளவில் புரதம் உடலில் சேருவது துர்நாற்றத்தை அதிகரிக்கும். மேலும் செரிமானமின்மை, வயிற்று வலி என வயிறு உபாதைகள் உண்டாகும். பாலிலிருந்து தயிர் உருவானாலும் இரண்டையும் ஒன்று சேர சாப்பிடுவது தவறு. அப்படி சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, அசிடிடி உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!