உயர் இரத்த அழுத்தத்தை போக்க ஐந்து எளிய வைத்தியங்கள்

 
Published : Jun 05, 2017, 01:04 PM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
உயர் இரத்த அழுத்தத்தை போக்க ஐந்து எளிய வைத்தியங்கள்

சுருக்கம்

Remedy for high blood pressure

உயர் இரத்த அழுத்தம் என்ற பெருவாரியாகப் பரவும் நோய். வேகமாக வளர்ந்து வரும் இன்றைய வாழ்க்கை முறையின் அங்கமாக திகழும் துரித உணவு, சோடா, மன அழுத்தம் இந்திய மக்களையும் பாதிக்க ஆரம்பித்து விட்டது. இதன் விளைவு, மூன்றில் ஒரு இந்தியன் கூடுதல் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

உயர் இரத்த அழுத்தம் விரைவில் குணமாகக்கூடியது அல்ல என்பதற்கு உதாரணம், மார்கெட்டில் கிடைக்கும் ஏராளமான பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள். ஆனால், ஒரு சில இயற்கை வழியில் கிடைக்கும் பொருட்களை வைத்தே அந்த உயர் இரத்த அழுத்த நோயை குணப்படுத்த முடியும்.

பூண்டு 

இரத்த அழுத்தம் லேசாக இருக்கக்கூடிய நோயாளிகளுக்கு பூண்டு நல்ல மருந்து. அதிலும் பூண்டிலுள்ள அல்லிசின், உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு கூடுவதற்கு உதவி செய்கிறது. அதன் விளைவாக இரத்த குழாய்களின் தசைகளை ஓய்வெடுக்க வைப்பதால், இதய விரிவாக்கம் மற்றும் இதயச் சுருக்க இரத்த அழுத்தமும் குறைந்து கட்டுப்பாட்டில் இருக்கும்.

கற்பூரவள்ளி 

கற்பூரவள்ளி இரத்தக் குழாய்களின் மெல்லிழைவான தசைகளை ஓய்வெடுக்க வைத்து, இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். மேலும் இது இதய துடிப்புகளை வலிமைப்படுத்தி, அழுத்தத்தின் வேகத்தை குறைக்க உதவுகிறது.

முருங்கைக்காய்

முருங்கைக்காயில் அதிக அளவு புரதச்சத்து மற்றும் பெருமதிப்பு வாய்ந்த வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் போன்றவை நிறைந்துள்ளது. ஆய்வின் படி முருங்கை செடியின் இலைகளிலிருந்து எடுக்கும் சாற்றால், இதயம் விரியும் போது மற்றும் சுருங்கும் போது ஏற்படும் இரத்த அழுத்தம் குறைய வாய்ப்பு உண்டு என்று கூறுகிறது. இதன் பயனை அடைவதற்கு, முருங்கைக் காயை பருப்பு வகைகளோடு சமைத்து உண்ண வேண்டும்.

நெல்லிக்காய்

நெல்லிக்காயும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன. நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி இரத்தக் குழாய்களை அகலப்படுத்த முக்கிய பங்கு வகிப்பதால், இரத்த அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது என்று நம்பப்படுகிறது.

முள்ளங்கி

இந்திய சமையலறைகளில் பொதுவாக பயன்படுத்தும் காய்கறியில் முள்ளங்கியும் ஒன்று. அப்படிப்பட்ட முள்ளங்கியில் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கின்ற பொருட்கள் இருக்கின்றன. அதுவும் பொட்டாசியம் அதிகமுள்ள முள்ளங்கி இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.

PREV
click me!

Recommended Stories

Belly Fat Burning Exercises : வீட்டில் செய்யும் இந்த '4' எளிய பயிற்சிகள் போதும்! கொழு கொழுனு தொங்கும் தொப்பையை அப்படியே குறைக்கும்
Healthy Lifestyle : 30 வயசான பிறகு இந்த '5' விஷயங்களை தெரியாம கூட பண்ணாதீங்க.. ஆரோக்கியத்திற்கு எதிரி