
இலட்சக்கணக்கான மக்கள் வயிற்றுக் கொழுப்பால் அவதியடைய காரணமாக விளங்குவது அவர்களின் அமர்ந்து இயங்கும் வாழ்க்கை முறையே.
பொதுவாக மக்கள் தொலைக்காட்சி பார்ப்பதில் தங்களின் அதிக நேரத்தை செலவழிக்கின்றனர்.
தொலைக்காட்சியை அனைத்துவிட்டு, சற்று எழுந்து நடந்தால், சும்மா உட்கார்ந்து நொறுக்குத்தீனி உண்ணுவது குறையும்.
மேலும், கணிணி சாந்த தொழில்களே இங்கு அதிகம்.
தொலைகாட்சி மற்றும் கணிணியில் வேலை பார்க்கும் நேரத்தை பாதியாக குறைத்து கொண்டவர்கள், தினமும் 100 கலோரிகளை குறைக்கலாம்.
இது 35 நாளில் 1 பவுண்ட் எடையை குறைப்பதற்கு சமமாகும்.
ஒவ்வொரு வாரமும் சற்று நடை கொடுத்தால், வயிற்றின் கொழுப்பு ஓரளவுக்கு குறையும்.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஒரு வாரத்திற்கு சுறுசுறுப்பாக 3 மணி நேரத்திற்கு நடை கொடுக்க வேண்டும்.