வயிற்றிலுள்ள கொழுப்பை குறைக்கு சில டிப்ஸ்; மறக்காம ஃபாலோ பண்ணுங்க…

 
Published : Jun 03, 2017, 01:36 PM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
வயிற்றிலுள்ள கொழுப்பை குறைக்கு சில டிப்ஸ்; மறக்காம ஃபாலோ பண்ணுங்க…

சுருக்கம்

Ways to reduce fat in stomach

 

துரித உணவுகளை தவிர்த்தல்:

சரியான முறையில் சாப்பிட்டால் 80 சதவீத கொழுப்பை நிச்சயம் குறைக்க முடியும். இடை உணவுகள், துரித  உணவுகள் ஆகிய கடைகளில் வாங்கும் உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். இயற்கையான காய்கறிகள் மற்றும் பழங்கள், வேக வைத்த உணவு  வகைகளை உண்ண வேண்டும்.

தண்ணீர்:

தாகம், அயர்ச்சி ஏற்படும் நேரங்களில் தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக பலர் உணவு உண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் தேவையற்ற கொழுப்பு படியும். எப்போதும் ஒரு தண்ணீர் பாட்டிலை கையில் வைத்துக் கொள்ள வேண்டும். குறைந்தது 6 முதல் 8 டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.

உடற்பயிற்சி: 

பல மணி நேரம் உழைப்பு மற்றும் வெகு தூர ஒட்டப்பயிற்சி ஆகிய இரண்டும் தரும் பலன்களை விட சிறிது நேரம் கடினமான உடற்பயிற்சியில் ஈடுபடும்போது கொழுப்பு அதிகமாக குறையும்.

சர்க்கரை வேண்டாம்: 

நாம் தினமும் உண்ணும் உணவில் சர்க்கரை நிறைய அளவு ஒளிந்திருக்கும். இதை உணர்ந்து, நாம் உண்ணும் உணவில்  சர்க்கரையை குறைப்பது நல்லது. இதற்கு பதிலாக தேன், பனங்கற்கண்டு பயன்படுத்தலாம்.

சோடியம் உப்பு தவிர்த்தல் :

சோடியம் உப்பை தவிர, பொட்டாசியம் உப்பு, எலுமிச்சை உப்பு மற்றும் கடல் உப்பு ஆகியவை விற்பனை செய்யப்பட்டு  வருகின்றன. இவற்றை வாங்கி பயன்படுத்தலாம்.

வைட்டமின் சி உணவுகள் :

வயிறு கொழுப்பு அதிகரிப்பதற்கு மிக முக்கிய காரணமாக கார்டிசால் உள்ளது. மன அழுத்தத்தால் சுரக்கப்படும்  கார்டிசாலை வைட்டமின் கட்டுப்படுத்துகிறது. உடலில் உள்ள கொழுப்புகளை சக்தியாக மாற்றும் கானிடைன் என்ற பொருளை சுரப்பதற்கு உதவும் வைட்டமின் சி மிகவும் அவசியமானதாக உள்ளது. வைட்டமின் சி உணவுகளை அதிகம் உண்ண வேண்டும்.

தூக்கம் :

போதுமான அளவு உறங்காமல் இருப்பது உடல் எடையை அதிகரிக்கும். உடல் எடையை மேம்படுத்த தூக்கம் மிகவும் அவசியம். 6 முதல் 8 மணி நேரம் உறக்கம் மேற்கொள்ள வேண்டும்.

PREV
click me!

Recommended Stories

Foot Sweating : கால் பாதத்தில் ரொம்ப வியர்க்குதா? இதுதான் 'காரணம்' உடனடி தீர்வுக்கு சூப்பர் வழி
Belly Fat Burning Exercises : வீட்டில் செய்யும் இந்த '4' எளிய பயிற்சிகள் போதும்! கொழு கொழுனு தொங்கும் தொப்பையை அப்படியே குறைக்கும்