திடீர் இரத்த அழுத்தம்... காரணம் என்ன?விளக்கம் இதோ...!!!

By Kalai Selvi  |  First Published Apr 30, 2023, 6:00 PM IST

தற்போது நம்மில் பலருக்கு இரத்த அழுத்த பிரச்சனை உள்ளது. இரத்த அழுத்தம் ஏன் ஏற்படுகிறது என்று இப்பதிவில் தெளிவாக காணலாம்.


ஆரோக்கியமற்ற அளவிற்கு இரத்த அழுத்தமே உயர் இரத்த அழுத்தம் ஏற்பட காரணம். மேலும் இதற்கான அறிகுறிகளை நாம் கவனிப்பது இல்லை. ஆனால் இதன் அறிகுறிகள் அன்றாடம் நாம் சந்திக்கும் சில பிரச்சனைகளாகத் தான் இருக்கும்.

சிலருக்கு ரத்த அழுத்தம் திடீரென அதிகரிக்கும். இது தவிர, உயர் இரத்த அழுத்தத்திற்கு பல காரணங்கள் உள்ளன. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களிடம் சில அறிகுறிகள் காணப்படுகின்றன. மூக்கில் இரத்தம் கசிதல், தலைச்சுற்றல், தலைவலி ஆகியவை உயர் இரத்த அழுத்தத்தின் முக்கிய அறிகுறிகளாகும். மார்பு அசௌகரியம், சோர்வு மற்றும் பதட்டம் போன்ற பிரச்சனைகளும் BP அதிகரிப்பதன் ஒரு பகுதியாக எழுகின்றன. இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பிபி செக் செய்ய வேண்டும். இப்போது உண்மையான இரத்த அழுத்தம் ஏன் திடீரென அதிகரிக்கிறது என்று பார்க்கலாம்.

Latest Videos

undefined

புகையிலை:

புகையிலை பயன்பாடு இரத்த அழுத்த அளவையும் அதிகரிக்கும். புகைபிடித்தல் மற்றும் புகையிலை மெல்லுதல் ஆகியவை இரத்த அழுத்த அளவை அதிகரிக்கலாம். புகையிலை பயன்பாடு புற்றுநோய் உட்பட பல கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். 

மருந்துகள்:

உயர் ரத்த அழுத்த பிரச்சனை இருந்தால்.. மருந்துகளில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சில ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் ஆபத்தானவை.

மன அழுத்தம்:

மன அழுத்தமும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். வேலை, தேர்வு போன்ற பல காரணங்களால் மன அழுத்தம் அதிகரிக்கிறது. மன அழுத்தத்திற்கான காரணம் நபருக்கு நபர் மாறுபடும்.

மது:

மது அருந்துவதும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. அதுமட்டுமின்றி, மருந்தை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படும்.

click me!