இந்தக்  குறிப்பை பெண்கள் மட்டும் படிக்கவும் - ரொம்ப உபயோகமானது...

First Published Mar 19, 2018, 1:42 PM IST
Highlights
Read this note only for girls - its very useful ...


பருவமடைந்த பெண்கள் மாதவிடாய் காலத்தில் ஒருசில தரமற்ற நாப்கின்களை பயன்படுத்துவதால் உடலின் ஆரோக்கியம் பாதிப்படைகிறது. ஏனெனில் சந்தையில் கிடைக்கும் நாப்கின்களை ஆய்வு செய்தபோது, சில நாப்கின்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட பஞ்சைக் கொண்டு தயாரிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

மறுசுழற்சியில் பிளாஸ்டிக் வகை பொருட்களை பயன்படுத்துவதுடன் நான்கு லேயர்களைக் கொண்ட நாப்கினில், முதல் லேயர் சுத்திகரிப்பு செய்யப்படாத பிளாஸ்டிக் பொருள், இரண்டாவது லேயர், மறு சுழற்சி செய்யப்பட்டு அச்சடிக்கப்பட்ட டிஷ்யூ பேப்பர், மூன்றாவது லேயர் பெட்ரோலிய பொருளாலும் தயாராக்கப்படுகிறது. 

மேலும், அந்த நாப்கின்களின் ஒட்டும் தன்மைக் கொண்ட கீழ் லேயர் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் பசை வகையை வைத்து பாலித்தீன் மூலம் செய்யப்பட்டுள்ளது. எனவே, இது போன்ற தரமற்ற நாப்கின்களை பயன்படுத்துவதால், அதில் உள்ள டையிங் ரசாயனம், ஹைப்போ குளோரைட் என்ற வேதிப்பொருள் ஆகியவை புற்றுநோயிற்கான மூலக்காரணிகளை உருவாக்குகின்றன. 

மேலும் பிறப்பு உறுப்பில் அலர்ஜி, சிறுநீர் பாதையில் பிரச்சனை, வெள்ளைப்படுதல், அதிகமான உதிரப்போக்கு, கர்ப்பவாய் புற்றுநோய் இது போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுத்துகிறது.

பெண்கள் மாதவிடாய் காலங்களில் தரமான நாப்கின் உபயோகிப்பதுடன், நான்கு மணிநேரத்துக்கு ஒருமுறை கட்டாயம் நாப்கினை மாற்றிக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

click me!