பரங்கிக்காய் என்றும் மஞ்சள்பூசணி என்றும் சொல்லப்படும் இந்த காய் பலருக்கும் விருப்பமான ஒன்று. பரங்கிக்காய் அளவுக்கு அதனுடைய விதைகளிலும் கூடுதல் சத்துக்கள் உண்டு. அதன் அருமை பெருமைகளை உணர்ந்தால், இனி விதைகளை யாரும் தூக்கி எறிய மாட்டீர்கள்.
அடுக்கடுக்கான சத்துக்கள்
பரங்கிக் காய் விதைகளில் அதிக மருத்துவக் குணம் உண்டு. குறிப்பாக நார்ச்சத்து நிறைந்தது, மேலும் புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் இ என மனித உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இதில் நிறைந்துள்ளன. அது தவிர பாஸ்பரஸ், மெக்னீசியம், தாமிரம், துத்தநாகம் உள்ளிட்ட உடல் உறுப்புகளுக்கு வலு சேர்க்கும் சத்துக்களும் உள்ளன. பரங்கிக்காய் விதைகள் தேங்காய் எண்ணுடன் வறுத்து திண்பது அல்லது பொடி செய்து சாப்பிடுவது உடலுக்கு நன்மையை தரும்.
எடை குறைக்க விரும்புவோர் கவனத்துக்கு
நீங்கள் எடைக் குறைக்க விரும்பி பத்தியத்தில் இருந்து வருபவர் என்றால் பூசணி விதைகளை தினமும் சாப்பிட்டு வரலாம். பத்தியம் காரணமாக ஏற்படும் சத்து குறைப்பாட்டை இந்த விதைகள் சமன்படுத்த உதவும். அதாவது வெறும் 100 கிராம் பூசணி விதைகளை நீங்கள் சாப்பிட்டால், சுமார் 600 கிலோ வரை கலோரிகளை பெற முடியும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பலர் தெரிவிக்கின்றனர்.
பட்டை, கிராம்பு, கசா கசா இருந்தால் போதும்- உங்களுடைய செல்வம் பன்மடங்கு பெருகும்..!!
விந்தணு தரம் மேம்படும்
ஆண்களுக்கு மஞ்சள் பூசணியிலுள்ள துத்தநாகம் ஒட்டுமொத்த விந்தணு தரத்தை மேம்படுத்த உதவுகிறது. இதனால் அவர்களுடைய பாலியல் வாழ்க்கை சிறப்பாக அமையும். அதேபோன்று பெண்களுக்கு மாதவிடாய் வலியை போக்க உதவும். அவர்களுடைய உடல்நலனிலுள்ள குறைபாடுகளை களைந்து உயிரிகளின் வளர்ச்சிக்கு பெரும் உதவிபுரியும்.
இருதய ஆரோக்கியத்தை காக்கும்
ஏற்கனவே பூசணியில் மெக்னீஷியம் இருப்பதை பார்த்தோம். இது உடம்பிலுள்ள உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஒரு கப் பூசணி விதைகளை சாப்பிட்டால், அதன்மூலம் இருதய ஆரோக்கியத்துக்கு தேவையான முழுமையான மெக்னீஷியம் சத்து கிடைத்துவிடும். மீன்களிலுள்ள ஒமேகா- 3 அமிலம் பூசணி விதையில் அதிகம் உள்ளது. இது உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரித்து சக்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
குளிர்காலம் துவங்கிவிட்டால் குதிகால் வெடிப்பு பிரச்னையும் பின்னாடியே வந்துவிடும்- என்ன செய்யலாம்..??
பூசணிக்காய் விதைகளை சமைக்கும் முறை
மஞ்சள் பூசணிக்காய் விதைகளை பச்சையாகவும் சாப்பிடலாம், அப்படியில்லை என்றால் சாதாரணமாக வறுத்தும் சாப்பிடலாம். நாம் தினசரி உண்ணும் மிக்சர், முருக்கு போன்ற ஸ்நாக்ஸ்களில் கலந்து சாப்பிடலாம். அதேபோல, இதை வறுத்து பொடி செய்து பாலுடன் கலந்து சாப்பிடுவதில் நார்ச்சத்து அதிகரிக்கும். அந்த பொடியில் கொஞ்சமாக காரப்பொடி சேர்த்து, காலை சிற்றுண்டிக்கு தொட்டுக்கொண்டு சாப்பிடுவது உடல்நலனுக்கும் சுவைக்கும் பொருத்தமாக அமையும்.