கர்ப்பிணி பெண்களை இவ்வளவு நோய்கள் தாக்க வாய்ப்பிருக்கு. எச்சரிக்கையா இருங்க…

Asianet News Tamil  
Published : May 12, 2017, 01:16 PM ISTUpdated : Sep 19, 2018, 03:16 AM IST
கர்ப்பிணி பெண்களை இவ்வளவு நோய்கள் தாக்க வாய்ப்பிருக்கு. எச்சரிக்கையா இருங்க…

சுருக்கம்

Pregnant women are more likely to attack diseases. Be cautious ...

கர்ப்பிணி பெண்களுக்கு நோய்த் தடுப்பாற்றல் அல்லது ஏற்கனவே ஏற்பட்ட நோய்த்தொற்றின் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தி நஞ்சுக்கொடி வழியாக உருப்பெற்றக் கருவிற்கு அனுப்பப்படுகிறது.

சின்னம்மை தடுப்பாற்றல் கொண்ட பெண்களுக்கு மறுபடியும் நோய்த் தொற்று ஏற்படாது. கர்ப்பக் காலத்தில் அவர்களுக்கோ அவர்களுடைய குழந்தைக்கோ நோய்த்தொற்று ஏற்படும் என்று பயப்படவேண்டிய அவசியமில்லை.

நீர்க்கோளவான் சின்னம்மை நோய்த்தொற்று கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படுவதனால் அது நஞ்சுக்கொடி வழியாக உருப்பெற்ற கருவை தொற்றடையச்  செய்து வைரஸ் சார்ந்த பரவுதலாக மாறலாம். இந்த நோய்த்தொற்று கருவளர் காலத்தின் முதல் 28 வாரங்களில் ஏற்பட்டால் உருப்பெற்றக் கரு நீர்க்கோளவான் சின்னம்மை நோய்க் குறித்தொகுப்பாக மாறலாம்.

உருப்பெற்ற கருவில் இந்த தாக்கம் ஏற்படுவதனால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதில் வளர்ச்சியடையாத கால் மற்றும் கை விரல்களிலிருந்து மலவாய் சார்ந்த பகுதி மற்றும் நீர்ப்பை வரை கடுமையான வடிவக்கேடு ஏற்படும் வாய்ப்பிருக்கிறது. ஏற்பட சாத்தியமுள்ள பாதிப்புகளில் உள்ளடங்கியவை.

மூளையில் ஏற்படும் பாதிப்பு:

மூளையழற்சி, சிறிய தலை, நீர் மண்டை மடைமை, மூளை வளர்ச்சிக்குறை

கண்ணில் ஏற்படும் பாதிப்பு:

விழித் தண்டு, விழி மூடி, மற்றும் லென்ஸ் கொப்புளங்கள், குறுகிய கண், விழிப்புரைகள், காரிய ரெட்டினா வழல்,  கண்ணின் செயல்திறன் இழப்பு

மற்ற நரம்பியல் சம்பந்தப்பட்ட சீர்குலைவு:

மைய நரம்பு மண்டலம் மற்றும் இடைதிருக முதுகுத் தண்டிற்கு சேதம் ஏற்படுத்துதல்,  நரம்புக்கட்டளை/உணர்வுத்திறன் போதாமல் இருத்தல், ஆழமான தசைநாண் தளர்ச்சி எதிர்வினைகள் இல்லாமை, ஒருங்கற்ற கண் பார்வை/ஹார்னரின்  நோய் குறித்தொகுப்பு

உடம்பில் ஏற்படும் பாதிப்பு:

மேல்/கீழ் முனையுறுப்புகளின் குறை வளர்ச்சி, ஆசன வாய் மற்றும் நீர்ப்பை சுருக்குத்தசை செயல் பிறழ்ச்சி தோல்

சீர்குலைவுகள்:

(தழும்பு) தோல் புண்கள் , தாழ்நிறமேற்றம் ஆகியவையாகும். நோயின் அறிகுறிகள் இருக்கும் பிறந்த குழந்தைக்கு நுரையீரல் அழற்சி  மற்றும் நோயின் மற்ற கடுமையான சிக்கல்கள் ஏற்பட அதிகமான ஆபத்து இருக்கிறது.

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake