உங்களுக்குத் தெரியுமா? வேறெந்த உணவிலும் கிடைக்காத சத்துகள் பழைய சோற்றில் கிடைக்கும்

 
Published : May 11, 2017, 01:54 PM ISTUpdated : Sep 19, 2018, 03:16 AM IST
உங்களுக்குத் தெரியுமா? வேறெந்த உணவிலும் கிடைக்காத சத்துகள் பழைய சோற்றில் கிடைக்கும்

சுருக்கம்

Do you know Nutrients that are not available in any other diet are available in the old round

நம் முன்னோர்கள் எந்த ஒரு பழக்கத்தையும் காரணமின்றி பின்பற்றமாட்டார்கள். பழைய சோறும் அப்படிதான். இதோ அதன் மகத்துங்கள்.

வைட்டமின்கள் அதிகம்

பழைய சோற்றில் மற்ற உணவுப் பொருட்களில் இல்லாத வைட்டமின் பி6, பி12 போன்றவை வளமாக நிறைந்துள்ளது.

செரிமானம் மேம்படும்

பழைய சோற்றில் லட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் உள்ளதால், அவற்றை உட்கொள்வதன் மூலம் செரிமான பிரச்சனைகள் நீங்கி, செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

பழைய சோற்றில் நோயெதிர்ப்பிற்கான காரணிகள் அதிகம் உள்ளது. இவற்றை உட்கொள்ளும் போது, அதில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள், உடல் உள்ளுறுப்புக்களை பாதுகாப்பதோடு, உடலைத் தாக்கும் நோய் கிருமிகளை எதிர்க்கும் வகையில் எப்போதும் விழிப்புடன் இருக்கச் செய்கின்றன. இதனால் உடலில் அடிக்கடி ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

முதுமை தடுக்கப்படும்

தினமும் காலையில் பழைய சோற்றினை சாப்பிட்டு வந்தால், விரைவில் முதுமைத் தோற்றம் ஏற்படுவதைத் தடுக்கலாம். நீண்ட நாட்கள் இளமையுடன் காட்சியளிக்க விரும்பினால், பழைய சோற்றினை காலை உணவாக உட்கொண்டு வாருங்கள்.

எலும்புகள் வலிமையடையும்

முக்கியமாக பழைய சோற்றினை சாப்பிடுவதால், இக்காலத்தில் பலரும் சந்திக்கும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

உடல் சூடு தணியும்

நீங்கள் உடல் சூட்டினால் அவஸ்தைப்பட்டால், பழைய சோறு சாப்பிடுங்கள். ஏனெனில் இதனை உட்கொண்டால் உடல் சூடு தணிந்து உடல் குளிர்ச்சியுடன் இருக்குமாம்.

மலச்சிக்கல்

பழைய சோற்றில் நார்ச்சத்து வளமாக நிறைந்துள்ளதால், மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கலாம்.

சுறுசுறுப்பு

காலையில் பழைய சோற்றினை உட்கொண்டால், நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்படலாமாம். குறிப்பாக சோர்வு என்ற ஒன்றையே மறந்துவிடலாம்.

இரத்த அழுத்தம்

தற்போது பலருக்கும் உள்ள இரத்த அழுத்தத்தை பழைய சோறு கட்டுப்படுத்துமாம். எனவே இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், பழைய சோற்றினை காலை உணவாக எடுத்து வாருங்கள்.

அல்சர்

இக்கால தலைமுறையினர் அதிகம் சந்திக்கும் அல்சர் பிரச்சனையை பழைய சோறு தடுக்குமாம். இதற்கு காரணம், அதில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் தான்.

சம்பா அரிசி / கைக்குத்தல் அரிசி

பழைய சோறு செய்வதற்கு சம்பா அரிசி அல்லது கைக்குத்தல் அரிசி தான் சிறந்தது. ஏனெனில் இந்த அரிசியில் தான் ஏராளமான ஊட்டச்சத்துக்களும், தாது உப்புக்களும் நிறைந்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

Winter Hair Care : குளிர்காலத்துல ஒரு முடி கொட்டாம அடர்த்தியாக வளரனுமா? அப்ப இந்த எண்ணெய்ல ஒன்னு தேய்ங்க!
Weight Loss : சியா விதை நீரா? சீரக தண்ணீரா? உடல் எடையை விரைவில் குறைக்க எது பெஸ்ட்?